ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஈரானில் இருந்து எண்ணெய் வாங்க இந்தியாவிற்கு அமெரிக்கா அனுமதி

ஈரானில் இருந்து எண்ணெய் வாங்க இந்தியாவிற்கு அமெரிக்கா அனுமதி

ஈரானுடன் எவ்வித வர்த்தக தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று மற்ற நாடுகளுக்கும் கட்டளையிட்டார் டிரம்ப் தற்போது ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உள்பட 8 நாடுகளுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கி உள்ளது.

ஈரானுடன் எவ்வித வர்த்தக தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று மற்ற நாடுகளுக்கும் கட்டளையிட்டார் டிரம்ப் தற்போது ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உள்பட 8 நாடுகளுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கி உள்ளது.

ஈரானுடன் எவ்வித வர்த்தக தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று மற்ற நாடுகளுக்கும் கட்டளையிட்டார் டிரம்ப் தற்போது ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உள்பட 8 நாடுகளுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கி உள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உள்பட 8 நாடுகளுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கி உள்ளது.

2015-ம் ஆண்டு, ஈரானுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த ஒப்பந்தம் செயல்பட முக்கிய காரணமாக இருந்தார்.

டொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின், அந்த ஒப்பந்தத்தால் பயன் இல்லை என்றும், ஈரான் தனது வருவாயை பயங்கரவாதிகளுக்கு உதவ பயன்படுத்துவதாகவும் கூறினார். இதனை காரணம் காட்டி, கடந்த மே மாதம், ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது.

மேலும் ஈரானுடன் எவ்வித வர்த்தக தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று மற்ற நாடுகளுக்கும் கட்டளையிட்டார் டிரம்ப். ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நவம்பர் 4-ந் தேதியுடன் எல்லா நாடுகளும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் ஈரானிடம் இருந்து அதிகமாக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. அதாவது இந்தியாவின் எண்ணெய் தேவையில் 2.6 சதவிகிதத்தை ஈரானே பூர்த்தி செய்கிறது. அமெரிக்காவின் எச்சரிக்கையை தொடர்ந்து, இந்தியா, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் வருடாந்திர அளவை 2 கோடியே 26 லட்சம் டன்னில் இருந்து ஒரு கோடியே 50 லட்சம் டன்னாக குறைத்துக்கொள்வதாக உறுதியளித்துள்ளது.

மேலும், கச்சா எண்ணெய்க்கான பணத்தை, உணவு, மருந்தை தவிர வேறு தேவைகளுக்கு ஈரான் பயன் படுத்துவதை தவிர்க்க, குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தவும், பணத்தை உள்ளூர் நாணயத்தில் வழங்கவும் ஒப்புக்கொண்டது.

இதையடுத்து, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியாவுக்கு தற்காலிக அனுமதி வழங்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது. ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கும் அனுமதி வழங்க ஒப்புக்கொண்டது.

அதே சமயத்தில், இது தற்காலிக அனுமதிதான் என்றும், அடுத்தடுத்த மாதங்களில் மேற்கண்ட 8 நாடுகளும் இறக்குமதியை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை, ஈரானிடமிருந்து இந்தியா ஒரு கோடியே 50 லட்சம் டன் எண்ணெய் இறக்குமதி செய்யலாம். இந்தியாவின் எண்ணெய் நிறுவனங்கள் இதனை எப்படி பிரித்துக்கொள்வது என பின்னர் முடிவு செய்யும். ஈரான் வழங்கும் எண்ணெய்க்கான காப்பீட்டு குறித்தும் இந்தியா முடிவு செய்ய வேண்டும். இந்தியாவை தவிர தென்கொரிய, ஜப்பான் உள்ளிட்ட 7 நாடுகளுக்கும், ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்துக்கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. இதனிடையே ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொளதார தடை நாளை மறுதினம் முதல் அமலுக்கு வருகிறது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: America, Crude oil