கொரோனா தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் இந்திய பொருளாதாரம் உலகிலேயே ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக மாறியுள்ளது. இங்கிலாந்தை விஞ்சி மேலே வந்தாலும் தனது கடந்த ஆண்டு சொந்த மதிப்பை விடவே வீழ்ச்சி அடைந்தது.
இருந்த போதிலும், இந்தியாவின் 100 பணக்காரர்களின் கூட்டுச் சொத்து மதிப்பு $25 பில்லியன் அதிகரித்து $800 பில்லியன்களைத் தொட்டுள்ளது என்று ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான 100 இந்திய பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் தனது செல்வத்தை ஏறக்குறைய மூன்று மடங்காக உயர்த்தி, அதானி இந்த ஆண்டு சுமார் 150 பில்லியன் டாலர் சொத்து கொண்டு நாட்டின் பெரிய பணக்காரர் என்று மகுடம் சூடியுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஃபோர்ப்ஸ் இந்தியாவின் வெளியீட்டாளர், நெட்வொர்க் 18 இன் உரிமையாளர், எண்ணெய் மற்றும் எரிவாயு முதல் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனர் முகேஷ் அம்பானி, கடந்த ஆண்டை விட 5 சதவீதம் குறைந்த சொத்துக்கள் என்ற நிலையில் 88 பில்லியன் டாலர்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க : 'அதிக தொழிற்சாலைகள்'.. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் டாப்.. ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிக்கை
நாட்டின் சில்லறை வர்த்தக மன்னரான ராதாகிஷன் தமானி, DMart பல்பொருள் அங்காடிகளின் உரிமையாளர் ஆவார். அவரது நிகர மதிப்பு 6 சதவீதம் குறைந்து $27.6 பில்லியனாக இருந்தாலும் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைந்தார்.
கோவிட்-19 தடுப்பூசிகளின் அபரிமிதமான லாபம் COVISHIELD தடுப்பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனர் சைரஸ் பூனவல்லா 21.5 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் நான்காவது இடத்திற்கு இழுத்துள்ளது.
இந்த ஆண்டு பட்டியலில் ஒன்பது புதிய முகங்கள் உள்ளன. இதில் மூன்று ஐபிஓக்கள் உள்ளனர்: வங்கியாளராக இருந்து அழகு மற்றும் பேஷன் சில்லறை விற்பனை நிறுவனமான நைக்காவை உருவாக்கிய ஃபால்குனி நாயர் இந்தியாவின் பணக்கார பெண்மணி எனும் இடத்தைப் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க : ட்விட்டர், பேஸ்புக், அமேசானில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு 1 மில்லியன் வழங்க தயாராக இருக்கும் நிறுவனம்!
எத்னிக் ஆடை தயாரிப்பாளர் ரவி மோடி, கடந்த டிசம்பரில் மெட்ரோ பிராண்ட் ஷூ தயாரிப்பாளர் ரஃபிக் மாலிக் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள புதிய முகங்களில் அடங்குவர்.
அதோடு மூன்று முக்கிய பணக்கார உறுப்பினர்கள் இந்த ஆண்டு காலமானார்கள் . பஜாஜ் குடும்பத்தின் ராகுல் பஜாஜ், ஆகாசா ஏர் நிறுவனத்தைத் தொடங்கிய ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, கட்டுமான அதிபரான சைரஸ் மிஸ்திரி என முக்கிய பணக்காரர்களை இந்த ஆனது நாம் இழந்துள்ளோம்.
பட்டியலில் இருந்து வெளியேறி மீண்டும் பட்டியலில் சேர்ந்துள்ளவர்களில் ஆனந்த் மஹிந்திராவும் ஒருவர். அவருடைய மஹிந்திரா & மஹிந்திரா எலக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியதன் மூலம் வணிக வட்டாரத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தினார்.
விஜய் சேகர் ஷர்மாவின் ஃபின்டெக் Paytm இன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் உலகளாவிய தொழில்நுட்ப வீழ்ச்சியோடு கடும் இழப்புகளை சந்தித்ததால் 100 பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இருந்து விளக்கப்பட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.