Home /News /business /

வீட்டு மனைகளின் விலை அதிகமாக வொர்க் புரம் ஹோம் நிலைதான் காரணமா? எஸ்பிஐ ஆய்வு..

வீட்டு மனைகளின் விலை அதிகமாக வொர்க் புரம் ஹோம் நிலைதான் காரணமா? எஸ்பிஐ ஆய்வு..

வீட்டு மனைகளின் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

வீட்டு மனைகளின் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

ஒரு பக்கம் கொரோனா நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்கியதோடு மட்டுமில்லாமல் மறு பக்கம் வீட்டு மனைகளின் விலை அதிகமாவதற்கும் காரணமாக மாறியுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    பெரும் மாநகரங்களில் மட்டுமல்லாமல் இப்போதெல்லாம் சிறு நகரங்களிலும் கூட குடியிருப்பு வீடுகள் அல்லது வீட்டு மனை வாங்குவது என்பது விலை மதிப்பு மிகுந்ததாக மாறி வருகிறது.  மூன்றாம் நிலை நகரங்களான கோவை, திருச்சி போன்ற இடங்களிலும் கூட கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு சொத்துகளின் விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

    ஆக, சிறு நகரங்களில் குடியிருப்பு மற்றும் சொத்துகளின் விலை ஏன் தொடர்ந்து அதிகரிக்கிறது என்பது குறித்து எஸ்பிஐ வங்கி ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு வீட்டில் இருந்தே பணி செய்யும் மாடல் மற்றும் ஃப்ரீலான்ஸ் என்னும் ஒப்பந்த அடிப்படையிலான பகுதிநேர பணிகள் அதிகரித்திருப்பதுதான் இத்தகைய மாற்றத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

    ஆய்வு சொல்லும் தகவல்

    இதுகுறித்து எஸ்பிஐ வெளியிட்ட ஆய்வறிக்கையில், “கடந்த 2 ஆண்டுகளில் பெரும் மாநகரங்களை காட்டிலும் சிறு நகரங்கள், புறநகர் பகுதிகள் போன்ற இடங்களில் வீடு மற்றும் சொத்துகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    மூன்றாம் நிலை நகரங்களான கோவை, திருச்சி போன்ற இடங்களில் இந்த மாற்றத்தை பார்க்க முடிகிறது.

    வீட்டில் இருந்து பணி செய்யும் மாடல் மற்றும் ஃபிரீலான்ஸ் பணி முறை தான் இதற்கெல்லாம் காரணமா என்றால், ஆம் என்றே சொல்லலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வீடு வாங்க நினைக்க காரணம் என்ன

    தனக்கென்று சொந்த வீடு இருக்க வேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் இருக்கும் என்ற நிலையில், எதிர்காலத்தில் வளர்ச்சி அடையக் கூடிய பகுதியில் அது அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர். வீட்டின் அமைவிடம், அங்குள்ள முக்கியமான வசதிகள், பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு இடையிலான தொலைவுகள், போக்குவரத்து வசதி போன்றவற்றை பரிசீலனை செய்து வீடு வாங்க திட்டமிடுகின்றனர்.

    வீட்டிலேயே டிஜிட்டல் அலுவலகம்

    என்னதான் வீட்டில் இருந்து பணி செய்வது என்றாலும், அது அலுவலகம் போன்று வரவில்லை என்று நினைப்போருக்காக வீட்டிலேயே டிஜிட்டல் அலுவலகம் என்ற தனி அறையுடன் தற்போது குடியிருப்புகள் விற்பனை ஆகத் தொடங்கியுள்ளன. அங்கு பணி செய்வதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன.

    Walk to Work மாடல்

    நல்ல போக்குவரத்து தொடர்புகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை கொண்ட மெட்ரோ நகரங்களில் இடப்பற்றாக்குறை நிலவுதன் காரணமாக நிலையான மறு வளர்ச்சியை கருத்தில் கொண்டு வால்க் டூ வொர்க் என்ற மாடல் செயல்படுத்தப்பட உள்ளது.

    வீட்டுக் கடன் அதிகரிக்கும்

    அடுத்த ஆண்டுகளில் வீட்டு கடன் சந்தை தற்போது இருப்பதை விட இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

     
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Price hike, Property

    அடுத்த செய்தி