ஹோம் /நியூஸ் /வணிகம் /

முதல் டிஜிட்டல் கரன்சியை வெளியிட்ட ஆர்பிஐ.. யாருக்கு யூஸ்? எப்படி பயன்படுத்தலாம்?

முதல் டிஜிட்டல் கரன்சியை வெளியிட்ட ஆர்பிஐ.. யாருக்கு யூஸ்? எப்படி பயன்படுத்தலாம்?

டிஜிட்டல் கரென்சி

டிஜிட்டல் கரென்சி

RBI Digital Currency: சில்லறை பங்கு வாடிக்கையாளர்களுக்கான டிஜிட்டல் கரன்சி பயன்பாடு ஒரு மாதத்திற்குள் தொடாங்கப்படும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  நாட்டின் முதல் டிஜிட்டல் ரூபாயை இந்திய ரிசர்வ் வங்கி இன்று சோதனை அடைப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

  முன்னதாக,  2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் போது, இந்திய ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்படும் என்றும்  இந்த டிஜிட்டல் பணம், ப்ளாக்செயின் மற்றும் இதர வகை தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

  அந்த வகையில், கடந்த அக்டோபர் மாதம் டிஜிட்டல்  கரன்சி தொடர்பான கொள்கை விளக்கக் குறிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதன் அடிப்படையில், சோதனை முறையில் நாட்டின் முதல் டிஜிட்டல் கரன்சியை இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டது.

  இதையும் வாசிக்கFDக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள வங்கிகளின் லிஸ்ட் - சீக்கிரம் பணத்தை டெபாசிட் செய்து பயன்பெறுங்கள்!

  முதற்கட்டமாக, அரசின் பங்கு பத்திரங்களை மொத்தமாக வாங்கும் (secondary market transactions in government securities - Wholesale Segement) நடவடிக்கைகளில் மட்டும் இந்த டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

  பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்டிஎஃப்சி , ஐசிஐசிஐ, கோடக் மஹிந்திரா , யெஸ் வங்கி, IDFC FIRST, எச்எஸ்பிசி உள்ளிட்ட 9 வங்கிகள் டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

  சோதனை அடிப்படையிலான சில்லறை பங்கு வாடிக்கையாளர்களுக்கான டிஜிட்டல் கரன்சி பயன்பாடு ஒரு மாதத்திற்குள் தொடங்கப்படும் என்றும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: RBI