வெள்ளியின் விலையும் இன்று குறைந்தது: இன்றைய (செப்டம்பர்-9) விலை நிலவரம்

வெள்ளி

வெள்ளியின் விலை கிராமுக்கு 80 பைசா குறைந்து 68.30ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Share this:
    தங்கம் விலை நேற்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 35616-க்கு விற்பனையான நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்துள்ளது. வெள்ளியின் விலையும் குறைந்து, கிலோ 68,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    கொரோனா தொற்றால் தொடர்ந்து தொழில்துறைகள் கடும் நெருக்கடியை சந்தித்தன. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்தி, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் போன்றவற்றில் இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். தங்கத்தின் தேவையும் அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்தது. அது படிப்படியாக உயர்ந்து சவரன் 40 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை படிப்படியாகக் குறைந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சில நாட்களாக உயர்ந்து வரும் நிலையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதன்டி, இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து, 35,472 ரூபாய்க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. அதேபொல 24 கேரட் தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 38,696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூ. 4452க்கு விற்பனையானது. பவுனுக்கு 160 ரூபாய் குறைந்து ரூ.35616-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல, நேறு வெள்ளியின் விலை கிராமுக்கு 10 பைசா குறைந்து ரூ 69.10-க்கு விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை 69,100 ரூபாய்கு விற்பனை செய்யப்பட்டது.

    Must Read : எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம் தான்... கடன் வாங்க டெபிட் கார்டு இருந்தா போதும்!

    இந்நிலையில், இன்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 80 பைசா குறைந்து 68.30ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 800ரூபாய் குறைந்து, 68,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Suresh V
    First published: