ஹோம் /நியூஸ் /வணிகம் /

நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு இதுதான் சரியான நேரம்... குறைந்தது தங்கம் விலை..!

நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு இதுதான் சரியான நேரம்... குறைந்தது தங்கம் விலை..!

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

Gold Silver Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.37,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

அந்த வகையில், நேற்றைய நாள் முடிவில் ஒரு சவரன் தங்கம் ரூ. 38,080க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ரூ.200 குறைந்து 37,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 4,735 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 200 காசுகள் குறைந்து ரூ.62.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

First published:

Tags: Gold rate