ஹோம் /நியூஸ் /வணிகம் /

தங்கம் விலை ஏன் குறைகிறது.. ஏறுகிறது... முடிவு செய்வது யார்?

தங்கம் விலை ஏன் குறைகிறது.. ஏறுகிறது... முடிவு செய்வது யார்?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Gold Price: சர்வதேச அளவில், அதிகம் தங்கம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவிற்கு தான் 2 ம் இடம். இந்தியாவில், பண்டிகை காலம் என்றால், தங்கத்தின் விற்பனை பன்மடங்கு அதிகரிக்கும். இதனால் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பதும், குறைவதும் பொதுவாக சர்வதேச காரணிகளை கொண்டே நடைபெறுகிறது. தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்யும் காரணிகள் என்ன.

சர்வதேச அளவில் கூட, தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது, தங்கத்தின் தேவைக்கும், இருப்புக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் தான்.... தேவை அதிகமாக இருக்கும் போது, தங்கத்தின் இருப்பு குறைந்தால், அதன் விலை பன்மடங்கு அதிகரிக்கிறது. கொரோனா காலத்தில் தங்கத்தின் விலை 50,000 வரை சென்றதற்கான காரணம், பங்குச்சந்தை முதலீடுகள் பாதுகாப்பான முதலீட்டு நோக்கி சென்றதால், தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலையும் அதிகரித்தது.

அடுத்த முக்கிய காரணம் விலைவாசி மற்றும் கரண்சி மதிப்பு. விலைவாசி அதிகரிக்கும் போது ஒரு நாட்டின் கரண்சி மதிப்பில் இது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கரண்சி மதிப்பு குறையும் போது அதிக தொகை கொடுத்து தங்கத்தை வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இதுவும் தங்கத்தின் விலை தாக்கத்தை ஏற்படுத்தும். தங்கத்தின் விலை பெரும்பாலும், விலைவாசி ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றவாறே இருக்கும் என்பதால், விலைவாசி ஒரு முக்கிய காரணியாக உள்ளது.

அடுத்த காரணம், மைய வங்கிகள் அறிவிக்கும் வட்டி விகித மாற்றங்கள். வங்கியில் வட்டி விகிதம் குறைந்தால், வருமானம் குறையும். இதனால் தங்கத்தில் முதலீடு அதிகரித்து அதன் விலை உயரும். வங்கி முதலீடுகள் பெரும்பாலும், தங்கத்தை விட மிகவும் பாதுகாப்பானவை. எனவே, வங்கியில் வட்டி விகிதம் அதிகரித்தால், முதலீடுகள் அதிக வட்டி வழங்கும் வங்கிகளுக்கு செல்லும். இதனால் தங்கத்தின் விலை குறைய தொடங்கும்.

Also read... Gold Rate: ராக்கெட் வேகத்தில் செல்லும் தங்கத்தின் விலை... இன்று (பிப்ரவரி 12, 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

சர்வதேச அளவில், அதிகம் தங்கம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவிற்கு தான் 2 ம் இடம். இந்தியாவில், பண்டிகை காலம் என்றால், தங்கத்தின் விற்பனை பன்மடங்கு அதிகரிக்கும். இதனால் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.

பொதுவாக மைய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்து வைத்திருக்கும். அரசின் கொள்கை முடிவுகளை பொறுத்து, தங்கத்தை வாங்குவதோ அல்லது விற்பதோ நடைபெறும். அவ்வாறு நடக்கும் போது தங்கத்தின் விலை மாற்றம் இருக்கும்.

First published:

Tags: Gold Price, Gold rate