வங்கிகளில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் எடுத்தால் கூடுதல் டிடிஎஸ் வரி

வங்கிகளில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் எடுத்தால் கூடுதல் டிடிஎஸ் வரி
கோப்புப் படம்
  • Share this:
வங்கிகளில் இருந்து குறிப்பிட்ட தொகைக்கு மேல் எடுக்கப்படும் பணத்திற்கு கூடுதல் டிடிஎஸ் வரி செலுத்த வேண்டிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் உள்ள கணக்குகளில் இருந்து ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் எடுக்கும் பணத்திற்கு 2 சதவீத டிடிஎஸ் வரி பிடித்தம் செய்யப்பட்டது.

இதை மாற்றி அமைத்த வருமான வரித்துறை, பான் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்படும் பணத்திற்கு பழைய வரியே வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.


Also read... கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்பான அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனு... மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

அதே நேரத்தில், பான் எண் இணைக்கப்படாமல் உள்ள வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்படும் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமான தொகைக்கு 20 சதவீத டிடிஎஸ் வரி செலுத்த வேண்டும் என்ற முறை அமலுக்கு வந்துள்ளது.

மேலும், பான் எண் இணைக்கப்பட்டிருந்தும், 3 ஆண்டுகளுக்கு மேல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படாமல் இருந்தால், 20 லட்சத்திற்கு மேல் எடுக்கும் தொகைக்கே 2 சதவீத டிடிஎஸ் வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading