ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட்களில் உணவுக்கான ரசீதுகளில் தாமாகவே சேவைக் கட்டணம் சேர்க்கப்படக்கூடாது என்று மத்திய அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருந்தன. இந்த விதிமுறைகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நவம்பர் 25ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தேசிய ரெஸ்டாரண்ட்கள் கூட்டமைப்பு இந்தியா (என்.ஆர்.ஏ.ஐ.) என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில் விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. முன்னதாக, சேவைக் கட்டணத்திற்குத் தடை விதித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) சார்பில் கடந்த ஜூலை 4ஆம் தேதி வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது. முன்னதாக என்ஆர்ஏஐ மற்றும் ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
சேவைக் கட்டணத்தைத் தடை செய்யும் வழிமுறைகள் :
ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட்களில் உணவுக் கட்டண ரசீதுகளில் தாமாகச் சேவை கட்டணத்தைச் சேர்ப்பதற்குத் தடை விதிப்பதற்கான விதிமுறைகளை சிசிபிஏ கடந்த ஜூலை 4ஆம் தேதி வெளியிட்டது. அந்த அறிவிக்கையில், “எந்த ஒரு பெயரிலும் சேவை கட்டணம் வசூலிக்கக் கூடாது. சேவைக் கட்டணம் செலுத்துமாறு எந்தவொரு ஹோட்டலும், ரெஸ்டாரண்டும் வாடிக்கையாளரைக் கட்டாயப்படுத்த முடியாது. சேவைக் கட்டணம் என்பது முற்றிலுமாக தாமாக முன்வந்து, சுய விருப்பத்தின் பேரில் வழங்கக் கூடியது என்பதை வாடிக்கையாளர்களுக்கு ஹோட்டல்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று சிசிபிஏ கூறியிருந்தது.
Also Read : வங்கி சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரி அதிகரிப்பு - சாமானிய மக்கள் பாதிப்பு
டெல்லி உயர் நீதிமன்றம் கூறுவது என்ன?
நீதிமன்ற இடைக்கால உத்தரவில், “இந்த விவகாரத்தை இன்னும் கூடுதலாகப் பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. இதனால், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில், ஜூலை 4ம் தேதியிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்குத் தடை நீடிக்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், ரெஸ்டாரண்ட்களில் இருந்து பார்சல்களாக வாங்கி செல்லப்படும் பொருள்களுக்குச் சேவை கட்டணம் வசூலிக்க முடியாது. ஒருவேளை நீங்கள் சேவைக் கட்டணம் செலுத்த விரும்பவில்லை என்றால் ரெஸ்டாரண்ட்களுக்கு செல்ல வேண்டாம். சேவைக் கட்டணத்தை விருப்பத்தின் பேரில் விட வேண்டுமா என்பதே கேள்வியாக இருக்கிறது. ஆகவே இந்த இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளின் 7ஆவது பத்திக்கு தடை விதிக்கப்படுகிறது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
என்ஆர்ஏஐ அறிக்கை
டெல்லி உயர் நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடை நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. ஆகவே ரெஸ்டாரண்ட்கள் சேவை கட்டணம் வசூலிப்பதில் எந்தவித சட்ட விதிமீறல் கிடையாது. அது வெளிப்படைத்தன்மையுடன் நடக்கிறது என்று என்ஆர்ஏஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டுமா?
2017ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் சேவைக் கட்டணத்தை விருப்பத்தை மீறிச் சேர்க்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சேவைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யப்படும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: HighCourt, Restaurant, Star Hotels