ஹோம் /நியூஸ் /வணிகம் /

ரிசர்வ் வங்கி நிதியை பயன்படுத்து குறித்து மத்திய அரசு இன்னும் திட்டமிடவில்லை: நிர்மலா சீதாராமன்

ரிசர்வ் வங்கி நிதியை பயன்படுத்து குறித்து மத்திய அரசு இன்னும் திட்டமிடவில்லை: நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

ரிசர்வ் வங்கியின் கையிருப்பு பணத்தை மத்திய அரசு திருடுவதாக ராகுல்காந்தி புகார் கூறியுள்ள நிலையில், காங்கிரஸ் காலத்தில் நிதியமைச்சராக இருந்தவர்களிடம் போய் கேளுங்கள் என நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப்படும் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்று மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரிநிதியை மத்திய அரசிடம் வழங்க முடிவு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரதமர் மற்றும் நிதியமைச்சரின் நடவடிக்கைகளால் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட சீரழிவை சமாளிக்க முடியாமல் திணறுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்ட அறிக்கையில், ரிசர்வ் வங்கியின் கையிருப்பை பயன்படுத்தும் விதத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அனைத்துப் பிரிவுகளும் போராட்டம் நடத்த வேண்டும் என்று அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கியிடம் நிதியை வழங்குமாறு மத்திய அரசு கோரிக்கை விடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் வல்லுநர் குழு எடுத்த முடிவின்படியே நிதி வழங்கப்படுவதாகவும், இந்த நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை மத்திய அரசு முடிவு செய்யவில்லை என்றும் மத்திய அமைச்சர் விளக்கம் அளித்தார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதற்கு முன்னதாக, தன்னுடைய கட்சியில் உள்ள முன்னாள் நிதியமைச்சர்களை ராகுல் காந்தி ஆலோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Also see...  ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியால் வேலையிழப்பு அபாயம்!

Published by:Vaijayanthi S
First published:

Tags: Minister Nirmala Seetharaman, RBI