ஹோம் /நியூஸ் /வணிகம் /

பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டியை உயர்த்திய அரசு வங்கி..விட்ராதீங்க!

பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டியை உயர்த்திய அரசு வங்கி..விட்ராதீங்க!

பிக்சட் டெபாசிட்

பிக்சட் டெபாசிட்

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி  தனது சேமிப்புக் கணக்கு வட்டி விகிதங்களையும் திருத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  முன்னணி பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ரூ. 2 கோடிக்கு கீழ் உள்ள பிக்சட் டெபாசிட் திட்டங்களின் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.

  கடந்த சில மாதங்களாக அரசு வங்கிகள் தொடங்கி தனியார் வங்கிகள், நிதி சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் பிக்சட் டெபாசிட் திட்டங்களின் வட்டி விகிதங்களை திருத்தி வருகிறது. சில வங்கிகள் எதிர்பாராத அளவுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்து வருகின்றன. அந்த லிஸ்டில் இப்போது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியும் இணைந்துள்ளது.

  தினசரி ரூ.100க்கும் குறைவாக முதலீடு செய்தால், லட்சங்கள் கையில் - எந்த சேமிப்பு திட்டம் தெரியுமா?

  சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 271-364 நாட்களில் முதிர்ச்சியடையும் FDகளுக்கான வட்டி விகிதத்தை 4.75% லிருந்து 5.25% ஆக உயர்த்தியுள்ளது மற்றும் 1 வருடத்தில் முதிர்ச்சியடையும் திட்டங்களுக்கு  60 bps வட்டி விகிதத்தை 5.55% லிருந்து 6.15% ஆக உயர்த்தியுள்ளது. 2 வருடங்கள். 2 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் 3 ஆண்டுகளுக்கும் குறைவான FDகளுக்கான வட்டி விகிதங்களை 40 அடிப்படை புள்ளிகள் (bps), 5.60% முதல் 6% ஆகவும், 3 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் 5 ஆண்டுகளுக்கு குறைவான திட்டத்திற்கு 25 bps 5.50% ஆகவும் அதிகரித்ததுள்ளது. ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் மற்றும் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு இப்போது 5.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

  வட்டி விகிதங்கள் விவரம்

  அதே போல் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி  தனது சேமிப்புக் கணக்கு வட்டி விகிதங்களையும் திருத்தியுள்ளது. இது , வரும் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கூடவே சிறப்பு 555 மற்றும் 999 நாள் FD திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அதிகபட்சமாக 6.75% வட்டி விகிதத்தையும், தோராயமாக 6.50% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bank, Fixed Deposit, Savings