உச்சத்தில் நிறைவடைந்த பங்குச்சந்தை... வங்கி மற்றும் ஆட்டோமொபைல் பங்குகளுக்கு லாபம்!

இந்தியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 125.37 புள்ளிகள் உயர்ந்து 37,270.82 புள்ளிகளாக நின்றது.

உச்சத்தில் நிறைவடைந்த பங்குச்சந்தை... வங்கி மற்றும் ஆட்டோமொபைல் பங்குகளுக்கு லாபம்!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: September 11, 2019, 10:33 PM IST
  • Share this:
இன்றைய பங்குச்சந்தை உச்சத்திலேயே நிறைவடைந்தது. வர்த்தகத்தில் வங்கி மற்றும் ஆட்டோமொபைல் துறை சார்ந்த பங்குகள் இன்று லாபம் பெற்றுள்ளன.

இந்தியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 125.37 புள்ளிகள் உயர்ந்து 37,270.82 புள்ளிகளாக நின்றது. இதேபோல், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 32.65 புள்ளிகள் உயர்ந்து 11,035.70 புள்ளிகளாக நிறைவடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் யெஸ் வங்கி பெரும் லாபம் பார்த்துள்ளது.

டாடா மோட்டார்ஸ், மாருதி, டாடா ஸ்டீல், வேதாந்தா, பஜஜ் ஆட்டோ, இண்டஸிண்ட் வங்கி, எஸ்பிஐ, ஹீரோ மோட்டார்கார்ப், எம்&எம், ஆசிய பெயிண்டஸ், ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ், எல்&டி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 10.21 சதவிகிதம் உயர்ந்துள்ளது.


ஆனால், ஓஎன்ஜிசி, ஹெச் சி எல், NTPC, சன் ஃபார்மா, டிசிஎஸ், பஜாஜ் பைனான்ஸ், பவர் க்ரிட், டெக் மஹிந்திரா மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2.93 சதவிகிதம் வீழ்ந்துள்ளன. இந்த வளர்ச்சி பெரிதாகக் கொண்டாடப்படவில்லை என்றாலும் நாட்டின் பொருளாதார மந்தநிலையை சீர் செய்ய அரசு முயற்சி செய்ய வேண்டும் என்பதே முதலீட்டாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.68 ரூபாய் ஆக உள்ளது.

மேலும் பார்க்க: சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம்- வேதனையில் பேடிஎம்..!பொருளாதார மந்த நிலை - சாமானியர்கள் எதிர்கொள்வது எப்படி?
First published: September 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்