₹ 20 லட்சம் கோடி தொகுப்பு நிதி திட்டம் - பங்குச்சந்தை உயர்வு

மும்பை பங்குச்சந்தை (கோப்புப் படம்)

  • Share this:
    மும்பை பங்குச்சந்தை தொடக்கத்திலேயே சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.

    கொரோனா பாதிப்புக்காக இதுவரை அறிவிக்கப்பட்ட நிதித்தொகுப்பையும் சேர்த்து, பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி ரூபாய் புதிய தொகுப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

    இது குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்குவார் என்றும் மோடி கூறினார். தொழில்துறை சம்பந்தமான அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மும்பையில் பங்குச்சந்தையில் வர்த்தகம் அதிகரித்துள்ளது.

    சென்செக்ஸ் 669 புள்ளிகள் உயர்ந்து 3200040 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 205 புள்ளிகள் உயர்ந்து 9401 புள்ளிகளில் வர்த்தகமாகியது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published: