ஹோம் /நியூஸ் /வணிகம் /

உள்நாட்டு தயாரிப்பில் ஈடுபட்டால் டெஸ்லாவை வரவேற்கத் தயார்!

உள்நாட்டு தயாரிப்பில் ஈடுபட்டால் டெஸ்லாவை வரவேற்கத் தயார்!

இந்தியாவில் டெஸ்லா

இந்தியாவில் டெஸ்லா

எலோன் மஸ்க் மற்றும் டெஸ்லா இந்தியாவிற்கு வரவேற்கப்படுகிறார்கள், ஆனால் நாட்டின் கொள்கைகளின்படி, இந்தியாவிலேயே உள்நாட்டுப் பொருட்கள் கொண்டு தயாரித்தால் அனுமதி உண்டு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

விண்வெளிக்கு ஊர்த்திகள் விடும் தனியார் நிறுவனம் என்றால் அது spacex நிறுவனம் தான் என்று தனது பெருமையை உலகத்தின் முன் நிலைநாட்டி புகழின் உச்சியில் வாழ்ந்து வருபவர் எலான் மஸ்க். புகழ்பெற்ற கார் நிறுவனமான டெஸ்லாவின் CEO.

இந்தியாவில் டெஸ்லா கார்களை விற்க அதன் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று அந்நிறுவனம் அரசிடம் கோரியது. வெளிநாட்டில் தயாராகும் கார்களை இந்தியாவில் விற்க அனுமதி கோரப்பட்டது. இந்திய அரசு உள்நாட்டு உற்பத்தி செய்யும் பட்சத்தில் அனுமதி அளிக்கப்படும் என்று பதிலளித்தது.

"கார்களை விற்கவும் சர்வீஸ் செய்யவும் முதலில் அனுமதிக்கப்படாத எந்த நாட்டிலும் டெஸ்லா உற்பத்தி ஆலையை வைக்காது" என்று மஸ்க் ஒரு ட்வீட்டில் தெரிவித்திருந்தார். அமெரிக்க எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தனது கார்களை முதலில் ஒரு நாட்டில் விற்கவும், சர்வீஸ் செய்யவும் அனுமதிக்க வேண்டும். அதுவரை உள்நாட்டில் தனது கார்களை உற்பத்தி செய்யாது என்று அந்நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டி.வி.9-ன் உலகளாவிய உச்சி மாநாட்டில் சனிக்கிழமை உரையாற்றிய கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கான அமைச்சர் மகேந்திர நாத் “பிரதமர் மோடியின் தலைமையிலான அரசாங்கம் ஆத்மநிர்பர் பாரத் கொள்கையில் விரைவாக முன்னேறி வருகிறது.ஆனால் ஆத்மநிர்பர் பாரத் அல்லது சுயசார்பு இந்தியா கொள்கையில் அரசாங்கம் எந்த வகையிலும் சமரசம் செய்யாது.எலோன் மஸ்க் மற்றும் டெஸ்லா இந்தியாவிற்கு வரவேற்கப்படுகிறார்கள், ஆனால் நாட்டின் கொள்கைகளின்படி மட்டுமே அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.இந்தியாவிலேயே உள்நாட்டுப் பொருட்கள் கொண்டு தயாரித்தால் அனுமதி உண்டு " என்றார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், மஸ்க், இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மூலம் டெஸ்லா வெற்றி பெற்றால், இந்தியாவில் உற்பத்திப் பிரிவை அமைக்கலாம் என்று கூறியிருந்தார். தற்போது, ​​சிஐஎஃப் (செலவு, காப்பீடு மற்றும் சரக்கு) மதிப்புள்ள $40,000க்கும் அதிகமான மதிப்புள்ள முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு 100% இறக்குமதி வரியும், அதற்கு குறைவான விலையில் விற்கப்படும் வாகனங்களுக்கு 60% வரியும் விதிக்கிறது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Automobile, Elon Musk, Import duty