• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • WFH -க்கு BPO நிறுவனம் வைத்த ஆப்பு - 70,000 இந்திய ஊழியர்கள் சோகம்!

WFH -க்கு BPO நிறுவனம் வைத்த ஆப்பு - 70,000 இந்திய ஊழியர்கள் சோகம்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

சிலர் படுக்கையறை உள்ளிட்ட, தங்களுக்கு வசதியான இடங்களில் அமர்ந்து வேலை செய்து வருவதால், கேமரா மூலம் கண்காணிப்பது தனிநபர் தகவல் பாதுகாப்புக்கு மட்டுமின்றி, இணைய டேட்டா பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என கூறுகின்றனர்.

  • Share this:
கொலம்பியாவைச் சேர்ந்த பிபிஓ (BPO) நிறுவனம் கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளால் வீட்டில் இருந்து வேலை செய்து வந்த 70 ஆயிரம் இந்திய ஊழியர்கள் உட்பட 3 லட்சம் ஊழியர்கள் கவலையடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு Work From Home பிரபலமானது. வைரஸ் நெருக்கடியால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாததால், கார்ப்ரேட் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கினர். அலுவலகத்தில் சிசிடிவி கேமராக்களின் முழு கண்காணிப்பின் கீழ் வேலை செய்த ஊழியர்கள், வீட்டில் இருந்து வேலை செய்யும்போது, கண்காணிப்பு என்ற பேச்சுக்கே இடம்மில்லாத வகையில் ப்ரீயாக வேலை செய்தனர். யார் கண் பட்டதோ தெரியவில்லை, இதற்கும் பிபிஓ நிறுவனம் ஒன்று ஆப்பு வைத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொலம்பியாவைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய BPO நிறுவனங்களுள் ஒன்றான டெலிபர்மாமென்ஸ், ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதையும் கண்காணிக்க முடிவு செய்துள்ளது. அதற்கேற்ப, ஊழியர்கள் அனைவரும் AI கேமராக்கள் பொருத்துமாறு அறிவுறுத்தப்பட்டு, நிறுவனம் கண்காணிப்பதற்கு அனுமதி வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறும் வற்புறுத்தி வருகிறது. 6.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் 3.70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்தியாவில் மட்டும் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கொலம்பியாவில் 39 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அனைத்து ஊழியர்களிடமும் வேலை செய்யும் இடத்தில் கண்காணிப்பு கேமராவை பொருத்துமாறு அறிவுறுத்தியுள்ள டெலிபர்மாமென்ஸ் நிறுவனம், ஊழியர்களின் டேட்டா பாதுகாப்புக்கு முழு உத்தரவாதத்தையும் கொடுப்பதாக தெரிவித்துள்ளது. அந்த பதிவாகும் வீட்டின் பகுதிகள், புகைப்படங்கள், சிறு குழந்தைகள், வாய்ஸ் டேட்டா அனைத்தும் பதிவாகும் என்பதால், டெலிபர்மாமென்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

சிலர் படுக்கையறை உள்ளிட்ட, தங்களுக்கு வசதியான இடங்களில் அமர்ந்து வேலை செய்து வருவதால், கேமரா மூலம் கண்காணிப்பது தனிநபர் தகவல் பாதுகாப்புக்கு மட்டுமின்றி, இணைய டேட்டா பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என கூறுகின்றனர். இது குறித்து விளக்கமளித்துள்ள டெலிபர்பாமென்ஸ் நிறுவனம், சட்டவிதிகளுக்கு உட்பட்டு இந்த நடைமுறையைக் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்துள்ளது. கேமரா மூலம் கண்காணிக்கும்போது எடுக்கப்படும் புகைப்படங்கள், ஊழியர்களின் சுகாதாரமான வேலைச் சூழல் இருப்பதை உறுதி செய்வதற்காக எடுப்பதாக கூறியுள்ளது.

Also read... வொர்க் ஃப்ரம் ஹோம் விரும்பும் ஊழியர்களின் சம்பளம் குறைப்பு

மேலும், இந்த கேமராக்கள் மூலம் தொடர்ச்சியாக ஊழியர்கள் கண்காணிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ள டெலிபர்பாமென்ஸ், தேவையற்ற தகவல்களும் சேகரிக்கப்படாது என உறுதியளித்துள்ளது. அதேநேரத்தில், கொலம்பியாவில் பணியாற்றும் ஊழியர்களை நிர்வாகம் மிரட்டி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியிருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. கையெழுத்திட மறுப்பவர்களுக்கு பணி பாதுகாப்பு என்பது கேள்விக்குறி என்பதால், சில வேலை இழப்பை எதிர்கொள்ள தயங்கி அதில் கையெழுத்திட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அல்பேனியாவில் இதேபோன்றதொறு நடைமுறையை டெல்பர்பாமென்ஸ் அறிமுகப்படுத்தியது. இது அந்நாட்டில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்து, வீடியோ மூலம் கண்காணிப்பதை ஏற்க முடியாது எனக் கூறி டெலிபர்மாமென்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிறுவனம், உலகின் மிகப்பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களான ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு BPO சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: