Home /News /business /

1,000 நகரங்களில் 5ஜி சேவையை வழங்க ஜியோ திட்டம்

1,000 நகரங்களில் 5ஜி சேவையை வழங்க ஜியோ திட்டம்

5 ஜி சேவையை விரைவில் தொடங்குகிறது ஜியோ.

5 ஜி சேவையை விரைவில் தொடங்குகிறது ஜியோ.

5ஜியை பொருத்தவரையில் 4 ஜி இணைப்புகளை விட 10 மடங்கு வேகத்தில் செயல்படும். முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 1000 முக்கிய நகரங்களில் 5 ஜி சேவையை கொண்டு வர நடவடிக்கையை ஜியோ எடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    1000 நகரங்களில் 5ஜி சேவையை வழங்குவதற்கு ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளையும் அளிப்பதற்கு ஜியோ திட்டமிட்டுள்ளது.

    இந்தியாவின் மிகப்பெரும் டெலிகாம் சேவை நிறுவமான ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் மாறியுள்ளது. மற்ற போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த செலவில் ஏராளமான சேவைகளை ஜியோ வழங்கி வருகிறது.

    அடுத்த கட்டமாக 5 ஜி தொழில் நுட்ப சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஆயத்தமாகி வருகிறது ஜியோ. இதுதொடர்பாக ஜியோ நிறுவனத்தின் 2021 – 22-ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    சமீபத்தில் முடிவடைந்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஜியோதான் அதிக விலைக்கு ஏலம் எடுத்தது. 5ஜிக்கான சேவையை வழங்குவதில் அதிகபட்சமாக சுமார் 1.50 லட்சம் கோடிக்கு ஜியோ நிறுவனம் அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்திருக்கிறது.

    5ஜியை பொருத்தவரையில் 4 ஜி இணைப்புகளை விட 10 மடங்கு வேகத்தில் செயல்படும். முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 1000 முக்கிய நகரங்களில் 5 ஜி சேவையை கொண்டு வர நடவடிக்கையை ஜியோ எடுத்துள்ளது. 3டி மேப்புகளும் இந்த 5ஜி சேவையில் இடம்பெறுவதால், இதனை சேவை அதிக தரம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    700 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஜியோ நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் மூலம் டவரில் இருந்து குறைந்தது 6 முதல் அதிகபட்சமாக 10 கிலோ மீட்டர் வரையில் சிக்னல் கிடைக்கும்.

    புதிய சேவையை வழங்குவதற்காக பின்லாந்தின் ஊலு பல்கலைக் கழகத்துடன் இணைந்து செயல்படுகிறது ஜியோ. 5ஜிக்கு அடுத்த கட்டமான 6ஜி சேவை குறித்து மிகத் தீவிரமாக இந்த பல்கலைக் கழகம் ஆய்வு செய்து வருகிறது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: 5G technology, Jio

    அடுத்த செய்தி