ஹோம் /நியூஸ் /வணிகம் /

அடுத்த 5 ஆண்டுகளில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் டெக் மஹிந்திரா.!

அடுத்த 5 ஆண்டுகளில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் டெக் மஹிந்திரா.!

டெக் மஹிந்திரா

டெக் மஹிந்திரா

Tech Mahindra | இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா அடுத்த ஐந்தாண்டுகளில் புதியதாக 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையினால் பல்வேறு ஐடி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றனர். மேலும் புதிதாக வேலைக்கு சேருமாறு ஆணை வழங்கப்பட்ட பலரையும் நிறுத்தி வைத்துள்ளனர். இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதிலும் இந்த பொருளாதார மந்த நிலையினால் வேலை வாய்ப்பின்மை மற்றும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த கொரோனா தொற்றினாலும், உலகெங்கும் நடைபெற்ற அசாதாரணமான சம்பவங்களினாலும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது.

ஆனால் இந்திய டெக் ஜாம்பவானான “டெக் மஹிந்திரா” அனைத்திலிருந்தும் வேறுபட்டு புதியதொரு செய்தி அறிவித்துள்ளது. அடுத்து வரப்போகும் ஐந்து ஆண்டுகளில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் சார்பாக கிட்டத்தட்ட 20,000 பணியாளர்களை புதியதாக பணியமர்த்தும் திட்டத்தில் இருப்பதாக நிறுவனத்தின் சிஇஓ சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

பிசினஸ் டுடே விற்கு அவர் அளித்த நேர்காணலில்”அடுத்த ஐந்து வருடங்களில் புதியதாக 20000 பணியாளர்கள் எங்கள் நிறுவனத்தில் பணியமர்த்தபடுவார்கள். ஏற்கனவே 1,64,000 பணியாளர்கள் எங்கள் நிறுவனத்தில் பணியில் இருக்கிறார்கள். இதனை 1,84,000 ஆக மாற்ற முயற்சி செய்து வருகிறோம். ” என டெக் மஹிந்திரா நிறுவனத்தின் சிஇஓ-வும் மேலாண்மை இயக்குனருமான குர்நாணி தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 5877 பணியாளர்களை அந்நிறுவனம் புதியதாக வேலையில் அமர்த்தி உள்ளது. அதற்கு முன் ஜூன் மாதத்தில் 6862 எண்ணிக்கையிலான பணியாளர்களை புதியதாக சேர்த்துள்ளது. தற்போது வரை 16912 என்ற எண்ணிக்கையில் பணியாளர்கள் டெக் மஹிந்திரா நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் டெக் மஹிந்திரா நிறுவனத்தை பொருத்தவரை வேலை இழப்பு என்பது கடந்த வருடங்களை விட மிகவும் குறைந்துள்ளதாகவே இருக்கிறது. இதற்கு முன்னர் நடந்த காலாண்டில் 22 சதவீதமாக இருந்த வேலை இழப்பானது தற்போது 20 சதவீதமாக குறைந்துள்ளது.

Also Read : மத்திய அரசின் DRDO அமைப்பில் ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை... உடனே விண்ணப்பிக்கலாம்!

“எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்களையும், உலகெங்கிலும் ஏற்படும் திறன் மேம்பாட்டுகளுக்கும் ஏற்ற வகையில் நாங்கள் ஆட்களை திட்டமிட்டு நியமித்து வருகிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read : 12ம் வகுப்பு போதும்... தமிழக கடலோர காவல்படையில் வேலை - முழு விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்!

சென்ற நிதியாண்டில் மட்டும் 10,000 பேரை புதியதாக பணியமர்த்தியுள்ள அந்நிறுவனம், நடப்பு நிதியாண்டிலும் முடிந்தளவு அதிக பணியாளர்களை நியமிப்பதற்கான வேலைகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளது. சென்ற மாதத்தில் குஜராத் அரசாங்கத்துடன் இணைந்து அடுத்த ஐந்தாண்டுகளில் 3000 ஐடி பணியாளர்களை வேலைக்கு எடுப்பதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Selvi M
First published:

Tags: IT JOBS, Mahindra, Recruitment, Tamil News