ஃபிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு பட்ஜெட்டில் அடித்த ஜாக்பாட்!

2019- ஏப்ரல் மாதம் முதல் ஃபிக்சட் டெபாசிட் முதலீடுகளுக்குப் பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ் விலக்கு வரம்பு 40,000 ரூபாயாக உயருகிறது.

news18
Updated: February 2, 2019, 4:36 PM IST
ஃபிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு பட்ஜெட்டில் அடித்த ஜாக்பாட்!
மாதிரிப் படம்
news18
Updated: February 2, 2019, 4:36 PM IST
பட்ஜெட் 2019-க்குப் பிறகு ஃபிக்சட் டெபாசிட் வரி சேமிப்பு நன்மையுடன் லாபகரமான ஒரு முதலீட்டுத் திட்டமாக மாறியுள்ளது. எனவே குறைந்த லாபம் என்றாலும் பாதுகாப்பான சேமிப்புத் திட்டமாக ஃபிக்சட் டெபாசிட் உள்ளது.

தற்போது ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்துள்ள தொகைக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கும் கூடுதலாக வட்டி வருவாய் கிடைக்கிறது என்றால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.

பட்ஜெட் 2019-ல் பொறுப்பு நிதி அமைச்சர் ஃபியூஷ் கோயல், ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்த பணத்திற்குக் கிடைக்கும் வட்டி வருவாய் இனி 40,000 ரூபாய்க்கும் கூடுதலாக இருந்தால் மட்டுமே டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

இதன்படி 2019- ஏப்ரல் மாதம் முதல் ஃபிக்சட் டெபாசிட் முதலீடுகளுக்குப் பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ் விலக்கு வரம்பு 40,000 ரூபாயாக உயருகிறது.

எனவே ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி விகித லாபம் அளிக்கும் ஒரு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் 1.5 லட்சம் ரூபாயை 3 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் போது 37,457 ரூபாய் வட்டி வருவாயாக கிடைக்கும். அப்போது இந்த வட்டித் தொகை உங்கள் வருமானமாகக் கணக்கு காண்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதுவே வட்டி வருவாய் 40,000 ரூபாயைக் கடக்கும்போது வரி செலுத்தியாக வேண்டும்.

ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்கள் படிவம் 15H சமர்ப்பிப்பதன் மூலம் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்குப் பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ்-ஐ தவிர்க்கலாம்.

ஒருவேலை டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டாலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில், முந்தைய நிதி ஆண்டுக்குப் பிடிக்கப்பட்ட டிடிஎஸ்-ஐ வருமான வரி கணக்கு தாக்கலில் குறிப்பிட்டு திரும்பப் பெறலாம்.

எனவே தற்போது ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்து வட்டி வருவாய் பெறுவது மட்டுமல்லாமல் வரியையும் சேமிக்கலாம்.

மேலும் பார்க்க: வருமான வரி விலக்கு பாஜகவின் பிரம்மாஸ்திரமா?
First published: February 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...