Home /News /business /

Work From Home முறையை நிறுத்துகிறதா TCS? ஐடி ஊழியர்களுக்கு CEO சொன்ன முக்கிய தகவல்!

Work From Home முறையை நிறுத்துகிறதா TCS? ஐடி ஊழியர்களுக்கு CEO சொன்ன முக்கிய தகவல்!

TCS

TCS

TCS | டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் வரும் 2025-க்குள் ஹைப்ரிட் ஒர்க் மாடலை ஊழியர்களிடையே செயல்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புகள் வெகுவாக குறைந்து வருவதால், பல நிறுவனங்கள் பழையபடி அலுவலகங்களில் இருந்து வேலை செய்யும் முறைக்கு மீண்டும் தொடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதியை விட்டு வெளியேறி நேரடியாக அலுவலகங்களுக்கு வந்து வேலை செய்யுமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டு வருகின்றன.

இந்நிலையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் வரும் 2025-க்குள் ஹைப்ரிட் ஒர்க் மாடலை ஊழியர்களிடையே செயல்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. சமீபத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் செயல்திறன் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கினார்.

அப்போது பேசிய அவர் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை அடையும் வரை அல்லது குறைந்தபட்சம் 80 சதவிகிதம் வரை தற்போதைக்கு நிறுவனம் அலுவலகத்திற்கு மீண்டும் வேலைக்கு திரும்புவதை ஊக்குவிக்கும். அதன் பிறகு டிசிஎஸ் 25/25 மாடல் செயல்படுத்தப்படும் என்றார். 25/25 பிளான் மிகவும் கட்டுப்பாடான முறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற அவர், இந்த பிளான் ஊழியர்கள் முதலில் மிகவும் இயல்பான பணி சூழலுக்குத் திரும்புவதையும் பின் நிரந்தர கலப்பின வேலை மாதிரியை (permanent hybrid work model) பெறுவதையும் உள்ளடக்கும் என்றார். இப்போதைக்கு குறைந்தபட்சம் 80 சதவீத ஊழியர்களாவது அலுவலகத்திற்கு வருவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்று அவர் கூறினார்.



தங்களது 6 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களில் சுமார் 20% பேர் இப்போது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்றார். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் தனது ஊழியர்களின் அலுவலக வருகையை 75% குறைக்கும் இலக்கான 25/25-ஐ முன்னெடுத்து செல்வதில் உறுதியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். COVID-19 பெருந்தொற்றை சமாளித்து மீண்டு வந்த நிலையில், அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு வந்து தினமும் பணியாற்றும் சூழலை மாற்ற நினைக்கிறது TCS. பெரும்பாலான வேலைகளை அலுவலகத்திற்கு வெளியே செய்ய விரும்புகிறது.

Also Read : கூகுள் இந்தியாவின் ஸ்டார்ட் அப் பள்ளி - வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்கள் பயிற்சிகள் ஆரம்பம்.!

25/25 மாடலை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் பணியாளர்களில் 25% மட்டுமே எந்த நேரத்திலும் தங்கள் அலுவலகத்தில் இருப்பார்கள், மீதமுள்ள முக்கால்வாசி பேர் தொலைதூரத்தில் இருந்து வேலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எளிமையாக சொன்னால் மொத்த ஊழியர்களில் 25% ஊழியர்கள் மட்டுமே அலுவலகம் வந்தால் போதும். நிறுவன உயர் அதிகாரிகள் 25% பணி நேரத்தை மட்டுமே அலுவலகத்தில் செலவிட்டால் போதும். தவிர ஒவ்வொரு பிராஜெக்ட்டிலும் 25 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகம் வர வேண்டும்.

Also Read : வேலை தேடுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் இவை.!

இதுவே TCS-ன் விஷன் 25/25 பிளான் ஆகும். கடந்த ஏப்ரலில் கோபிநாதன் கூறியது போல், அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் அலுவலக வேலை முறைக்கு மீண்டும் அழைக்கப்பட்டு உள்ளனர். சமீபத்திய தகவலின்படி சுமார் 1 லட்சம் TCS ஊழியர்கள் இப்போது அலுவலகத்தில் இருந்து வேலை செய்கிறார்கள். மீதமுள்ள பெரும்பாலான ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய அழைக்கும் பணியை டிசிஎஸ் திட்டத்தை துரிதப்படுத்துகிறது. இதற்கிடையில், ஜனவரி-ஏப்ரல் 2022 காலாண்டில் டிசிஎஸ்-ன் அட்ரிஷன் விகிதம் 17.4 சதவீதமாக இருந்தது. நடப்பு காலாண்டில் இது 19.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Tata consultancy services, Work From Home

அடுத்த செய்தி