ஹோம் /நியூஸ் /வணிகம் /

டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களின் ஹைபிரிட் மாடல் பணி எப்படி செயல்படுத்தப்படும்?

டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களின் ஹைபிரிட் மாடல் பணி எப்படி செயல்படுத்தப்படும்?

வீட்டில் இருந்து வேலை பார்க்கும் முறை

வீட்டில் இருந்து வேலை பார்க்கும் முறை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுகள் மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. இதனால், தங்கள் நிறுவனங்களில் என்ன பணி மாடல் கடைப்பிடிக்கப்பட போகிறது என்பதை தெரிந்து கொள்வதில் ஊழியர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுகள் மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. இதனால், தங்கள் நிறுவனங்களில் என்ன பணி மாடல் கடைப்பிடிக்கப்பட போகிறது என்பதை தெரிந்து கொள்வதில் ஊழியர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக் போன்ற நிறுவனங்கள் ஹைப்ரிட் மாடல் பணி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டன. பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்களை நேரடியாக அலுவலகம் வர வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதே சமயம், பெரும்பாலான ஊழியர்கள் இன்னமும் வீட்டில் இருந்து பணி செய்து வருகின்றனர்.

வாரம் சில நாட்கள் அலுவலகத்தில் பணி

சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வாரத்தில் சில நாட்கள் அலுவலகத்தில் வந்து பணி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளன. எனினும், இன்னும் சில நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதித்துள்ளன. இதுகுறித்து தொழில்துறை நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. ஆகவே, தற்போதைய சூழலில் வொர்க் ஃபிரம் ஹோம் மாடல் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை’’ என்று கூறினார்.

அலுவலகத்தில் பணி நடைபெறுமா?

மனித வளங்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்கும் முன்னணி நிறுவனமான டீம்லீஸ் நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வில், “தொழில்நுட்பம் முதல் உற்பத்தி வரையிலான பல நிறுவனங்கள் வரை, மொத்த விற்பனை முதல் ரீடெயில் நிறுவனங்கள் வரை, சுகாதாரம் முதல் ஆட்டோமொபைல் துறை வரை என 58 சதவீத நிறுவனங்களில் 2022ஆம் ஆண்டு முழுவதும் அலுவலகத்தில் பணி நடைபெறும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகம் வர விரும்பும் ஊழியர்கள்

அலுவலகத்திற்கு நேரடியாக வந்து வேலை செய்ய ஊழியர்கள் விரும்புகின்றனர் என்று 43.5 சதவீத ஹெச்ஆர் தலைவர்கள் கூறுகின்றனர். சுமார் 76.78 சதவீத பணியாளர்கள் தாங்கள் எப்படி பணி செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்யும் வாய்ப்பு தர வேண்டும் என தெரிவித்திருக்கின்றனர்.

Also Read...  பேடிஎம் மூலமாக உங்கள் அக்கவுண்ட் பேலன்ஸ் தெரிந்து கொள்ளலாம்!

டிசிஎஸ் மாடல்

வாரத்தில் சில நாட்கள் வீட்டில் இருந்தும், சில நாட்கள் அலுவலகத்திற்கு வந்தும் வேலை செய்யும் ஹைப்ரிட் வொர்க் மாடல் அமலுக்கு வர இருப்பதாக டாடா கன்சல்டென்ஸி நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. வீட்டில் இருந்து வேலை செய்யும்போது குழந்தை பராமரிப்பு, விலங்கு பராமரிப்பு, வீட்டு வேலை என பல வகைகளில் கவனச்சிதறல் ஏற்படுகிறது என்று டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்ஃபோசிஸ் மாடல்

மூன்று விதமான வொர்க் மாடல்களை இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக அலுவலகம் அமைந்திருக்கும் அதே ஊர்களில் வீடு இருப்பவர்கள் வாரத்தில் 2 நாட்கள் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டாவதாக வெளியூர்களில் உள்ள ஊழியர்கள் அடுத்த சில மாதங்களில் அலுவலகம் வரவும், மூன்றாவதாக நீண்ட கால அடிப்படையில் ஹைப்ரிட் வேலை திட்டத்தை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

HCL மாடல்

ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதாக ஹெச்சிஎல் நிறுவனம் தெரிவித்தது. இயல்பு நிலை திரும்பும் வரையில் ஹைப்ரிட் மாடல் பணி தொடரும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Infosys, TCS, Work From Home