இந்தியாவில் கோவிட்-19 தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூட நாட்டில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் நேரடி அலுவலக முறைகளுடன் சேர்த்து வொர்க் ஃப்ரம் ஹோம் முறையிலும் ஊழியர்களை வேலை செய்ய அனுமதிக்கும் திட்டங்களை கொண்டுள்ளன.
TCS, Infosys மற்றும் HCL Tech உள்ளிட்ட பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை வேலை செய்ய வைப்பதற்கு ஹைப்ரிட் மாடல் முறையை தேர்வு செய்துள்ளதாக கூறி இருக்கின்றன. சமீபத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தனது ஹைப்ரிட் வேலை மாடலின் மூன்று E-க்கள் (Enable, Embrace, Empower) பற்றி ஊழியர்களுக்கு விளக்கியது.
இதனிடையே சமீபத்தில் உலகளவில் என்று பார்க்கும் போது ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தனது நிறுவன ஊழியர்கள் ரிமோட் மற்றும் ஆபிஸிலிருந்து வேலை செய்வதற்கு இடையில் ஒரு இடைநிலையை கண்டறிய முயற்சி செய்து வருவதாக கூறினார். முன்பு பலர் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினர் ஆனால் கடந்த 2 வருடங்களில் மன ஆரோக்கியமும் மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் டிம் குக்.
TCS-ன் 3E ஹைப்ரிட் மாடல் வேலை:
எம்ப்ரேஸ் (Embrace):
வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையில் வீட்டு வேலைகள், குழந்தைகளின் பள்ளி படிப்பு மற்றும் செல்லப்பிராணி பராமரிப்பு உள்ளிட்ட பல சுற்றுச்சூழல் கவனச்சிதறல்கள் இருப்பதாக TCS நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது. வேலை மற்றும் வீட்டிற்கு இடையே தெளிவான பிரிப்பு இல்லாமல், "always online" மோடில் செல்வது மிகவும் சாத்தியம். இதற்கு சில ஆக்கபூர்வமான சிந்தனை மற்றும் முழுமையான வாழ்க்கைக்கு முன்னுரிமை தேவைப்படுகிறது.
எனேபிள் (Enable):
ஒரு நபர் Embrace-ஐ ஏற்க தயாராக இருக்கும் அதே வேளையில், "எங்கிருந்தும் வேலை செய்யலாம்" என்பதற்குச் சரியான சுற்றுச்சூழல் அமைப்பைச் செயல்படுத்த எங்கள் நிறுவன அமைப்பு தயாரா என்பது சமமான முக்கியமான கேள்வி என்று இது தொடர்பான செய்தி குறிப்பில் TCS குறிப்பிட்டுள்ளது. நிறுவனங்கள் வேலை மற்றும் பொழுதுபோக்கின் சமநிலையை உறுதி செய்ய வேண்டும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் வேலையில் மகிழ்ச்சியைக் கொண்டுவரவும் நிறுவனத்தால் செய்யக்கூடிய பல நடவடிக்கைகள் உள்ளன. இந்த விஷயத்தில் நிறுவனங்கள் வெறும் வாய் வார்த்தைக்கு என்று இல்லாமல் அதிகமானவற்றைச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
Also Read : அமேசான் நிறுவனத்துக்கு ரூ.200 கோடி அபராதம்:
எம்பவர் (Empower): தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கை வீடுகளில் ஒன்றிணைவதால் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் ஆகிய இருவருக்குமே எங்கிருந்தும் வேலை செய்யலாம் என்ற புதிய முறையில் அதிகாரமளிக்கப்பட வேண்டும் என்பதும் TCS-ன் கருத்தாக உள்ளது.
இன்ஃபோசிஸின் நீண்ட கால வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டம்:
வீட்டிலிருந்து வேலை என்னும் போது இன்ஃபோசிஸ் மூன்று கட்ட திட்டத்தை கொண்டுள்ளது. முதல் கட்டத்தில், நிறுவனம் DC-க்கள் (development centres) அமைந்துள்ள அல்லது DC-க்களுக்கு அருகிலிருக்கும் நகரத்தில் உள்ள அவர்களின் வீட்டு இருப்பிடங்களில் உள்ள ஊழியர்களை வாரத்திற்கு இரண்டு முறை அலுவலகத்திற்கு வரும்படி ஊக்குவிக்கிறது. இரண்டாவது கட்டத்தில், DC நகரங்களுக்கு வெளியே இருப்பவர்கள், அவர்கள் தங்கள் அடிப்படை மேம்பாட்டு மையங்களுக்கு (base development centres) திரும்பி வர முடியுமா என்பதை பார்க்க நிறுவனம் ஊக்குவிக்க இருக்கிறது. மூன்றாவதாக வாடிக்கையாளர்கள், ஒழுங்குமுறை சூழல் மற்றும் பிற பல விஷயங்களைப் பொறுத்து நீண்ட காலத்திற்கு வேலையில் ஒரு ஹைபிரிட் மாடலை உருவாக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்கிறது இன்ஃபோசிஸ்.
ஹைப்ரிட் மாடலுக்கான HCL-ன் திட்டம்: HCL டெக்னாலஜிஸ் நிறுவனமும் இப்போதைக்கு ஹைப்ரிட் மோடில் தொடர்கிறது. நிறுவனத்தின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்று அதன் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு என HCL கூறி உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா சேவைகளை உறுதி செய்து வந்தாலும் அவ்வப்போது நிலைமையை கண்காணித்து வருகிறோம் மற்றும் ஹைபிரிட் மோடில் தொடர்ந்து செயல்படுகிறோம் என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Office