முகப்பு /செய்தி /வணிகம் / TCS | இந்திய மென்பொருள் துறையின் தந்தை என போற்றப்படும் TCS நிறுவனர் மாரடைப்பால் மரணம்..

TCS | இந்திய மென்பொருள் துறையின் தந்தை என போற்றப்படும் TCS நிறுவனர் மாரடைப்பால் மரணம்..

ஃபாகிர் சந்த் கோஹ்லி

ஃபாகிர் சந்த் கோஹ்லி

இந்திய மென்பொருள்துறையின் தந்தை என போற்றப்படும் டிசிஎஸ் நிறுவனர் மாரடைப்பால் காலமானார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

TCS நிறுவனரும், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஃபாகிர் சந்த் கோஹ்லி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 96. இந்திய மென்பொருள் துறையின் தந்தை என போற்றப்படும் F.C. கோஹ்லி தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கத் தலைவராக பதவி வகித்துள்ளார். 1950-இல் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பை முடித்த கோஹ்லி, 1970-இல் டாடா எலெக்ட்ரிக்கல் கம்பெனியின் இயக்குநராக உயர்ந்தார்.

TCS-இல் தனது பதவிக் காலத்தில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் ஐ.டி தொழிற்துறையை உருவாக்கிகாட்டினார். இந்தியாவின் தொழில்நுட்ப புரட்சிக்கு முன்னோடியாக இருந்த கோஹ்லி, 1999-இல் தனது 75 வயதில் ஓய்வு பெற்றார். இந்திய அரசு இவரது சாதனையைப் போற்றி பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது. மென்பொருள் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக 2000-ஆம் ஆண்டில் தாதாபாய் நவ்ரோஜி நினைவு விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜி கூறுகையில், ”கோஹ்லி அவர்கள் இந்திய ஐடி துறையின் உண்மையான முன்னோடி. நாங்களெல்லாம் அவரின் வழித்தடத்தையே பின்பற்றி வந்துள்ளோம். ஐடி துறைக்கும் இந்தியாவுக்குமான அவரது பங்களிப்பு அளவிட முடியாதது.”

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: TCS, Wipro