உலகின் மதிப்புவாய்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில் 2ம் இடத்துக்கு முன்னேறியிருப்பதன் மூலம், இந்தியாவின் டாடா குழுமத்தின் அங்கமான டிசிஎஸ் சாதனை படைத்துள்ளது.
டாடா குரூப் குழுமத்துக்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம் இந்தியாவின் முன்னோடி தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கி வருகிறது. நடப்பு ஆண்டில் உலக அளவில் மதிப்புமிக்க ஐடி நிறுவனங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு டிசிஎஸ் முன்னேறி அசத்தியிருக்கிறது. இதன் மூலம் அமெரிக்காவின் ஐபிஎம் நிறுவனத்தை டிசிஎஸ் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.
பிராண்ட் ஃபைனான்ஸ் (Brand Finance ) என்பது உலகின் முன்னணி பிராண்ட் மதிப்பீடு மற்றும் கன்சல்டன்சி நிறுவனமாகும். இது லண்டன் நகரை தலைமையிடமாகக் கொண்டது. ஆண்டுதோறும் உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலை இந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதன்படி 2022ம் ஆண்டுக்கான உலகின் மதிப்புமிக்க 25 ஐடி நிறுவனங்களின் பட்டியலை இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு 2வது இடத்தில் இருந்த ஐபிஎம்-ஐ பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் டிசிஎஸ் நிறுவனம் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது டிசிஎஸ் நிறுவனம் 12% வளர்ச்சியை பெற்றுள்ளது. அதே போல 2020ம் ஆண்டில் இருந்து 24% வளர்ச்சியில் அந்நிறுவனம் எட்டியிருக்கிறது. இதன் முலம் இந்த காலகட்டத்தில் 16.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் அதிகரித்துள்ளது.
உலகின் மதிப்புமிக்க ஐடி நிறுவனமான அசென்சர் முதல் இடத்தில் நீடித்து வருகிறது. மற்றொரு இந்திய நிறுவனமான இன்போசிஸ் 3வது இடத்தையும் பிடித்துள்ளன. 2ம் இடத்தில் இருந்த ஐபிஎம் 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
டிசிஎஸ் மட்டுமல்லாது இன்போசிஸ், விப்ரோ, டெக் மகிந்திரா, ஹெச்.சி.எல், LTI போன்ற பிற இந்திய நிறுவனங்களும் இந்த டாப் 25 பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
Also read: ஜின்னா டவரில் தேசியக் கொடி ஏற்ற முயற்சி - ஆந்திராவில் பதற்றம்
டிசிஎஸ் நிறுவனம் கொரோனா காலத்தில் தனக்கான சவால்களை வெற்றிகரமாக கையாண்டதுடன், தனது வணிக செயல்பாடுகளை உலகளவில் விஸ்தரித்து, விளையாட்டு நிகழ்வுகளுக்கு ஸ்பான்சர்ஷிப் தருவது போன்ற தனது பிராண்ட் இமேஜையும் அதிகரித்ததாக பிராண்ட் ஃபைனான்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்தியா ஐடி துறையில் தொடர்ந்து சாதிக்கும் எனவும், செயற்கை நுன்னறிவு, Data analytics, IoT போன்ற ஐடி சேவை துறையிலும் தொடர்ந்து கோலோய்ச்சும் என தெரிவித்துள்ளது..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.