விவசாயிகள் நிதி உதவியை இவர்களால் பெற முடியாது? ஏன் தெரியுமா?

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதி உதவி அளிக்கும் திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

news18
Updated: February 8, 2019, 5:51 PM IST
விவசாயிகள் நிதி உதவியை இவர்களால் பெற முடியாது? ஏன் தெரியுமா?
மாதிரிப் படம்
news18
Updated: February 8, 2019, 5:51 PM IST
மத்திய அரசு 2019 மார்ச் 31-ம் தேதிக்குள் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் முதல் தவணையை அளிக்க உள்ளது.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதி உதவி அளிக்கும் திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. எனினும், வருமான வரி செலுத்துபவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் விவசாயம் செய்து வந்தாலும் இந்த நிதி உதவியைப் பெற முடியாது என்று தகவல்கள் கூறுகின்றன.

அது மட்டுமல்லாமல் பதிவு செய்துள்ள மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் விவசாய நிதி உதவி கிடைக்காது. வருமானத்தின் அடிப்படையில், இந்த விதிவிலக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இடைக்கால பட்ஜெட் 2019-ல் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு, 2 ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி வழங்க 75,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

இந்தத் திட்டம் கீழ் 12 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் பட்ஜெட்டில் தெரிவித்திருந்தனர்.

தேர்தலுக்கு முன்பே விவசாயிகளுக்கு இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்து விவசாயிகளின் வாக்குகளைக் கவரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே 2019 மார்ச் 31-ம் தேதிக்குள் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின் கீழ் முதல் தவணை வழங்கப்பட வாய்ப்புள்ளது.

மேலும் பார்க்க: பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு...
First published: February 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...