எரிபொருள் மீதான வரிகள்... உலகளவில் இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?

எரிபொருள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

எரிபொருள் மீதான வரிகள்... உலகளவில் இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?
பெட்ரோல் நிலையம் மாதிரிப் படம்
  • Share this:
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 17வது நாளாக அதிகரித்துள்ளது. கடந்த 17 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் 55 காசுகளும் அதிகரித்துள்ளது.

இப்படி, பெட்ரோல் , டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச அளவில், பெட்ரோல் மற்றும் டீசல் மீது அதிக வரி விதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லிட்டர் எரிபொருளின் விலையிலும், 69.3 சதவிதம் வரியாக மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இது மற்ற நாடுகளை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த வகையில், இத்தாலியில் ஒரு லிட்டர் எரிபொருளின் விலையில், 64 சதவிதம் வரியாக உள்ளது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் எரிபொருளின் மீதான வரி 63 சதவிதமாகவும், பிரிட்டனில், 62 சதவிதமாகவும் உள்ளது. ஸ்பெயினில், 53 சதவிதமாகவும், ஜப்பானில் 47 சதவிதமாகவும் உள்ளது. கனடாவில் 33 சதவிதமும், அமெரிக்காவில் ஒரு லிட்டர் எரிபொருளின் மீது 19 சதவிதமும் வரியாக விதிக்கப்படுகிறது.

இந்தியாவில் தான் உலக அளவில், அதிகமாக பெட்ரோல், டீசல் மீது வரி விதிக்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் மீதான உற்பத்தி வரி, 9 ரூபாய் 48 காசுகளாக இருந்தது, ஆனால் தற்போது 32 ரூபாய் 98 காசுகளாக அதிகரித்துள்ளது. இது சுமார் 248 சதவித உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 2014ல் ஒரு லிட்டர் டீசல் மீதான உற்பத்தி வரி 3 ரூபாய் 56 காசுகளாக இருந்தது. ஆனால் தற்போது சுமார் 31 ரூபாய் 83 காசுகளாக அதிகரித்துள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளில் 794 சதவிதம் உயர்வு.2014ம் ஆண்டு முதல் தற்போது வரை, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி 12 முறை உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் இரண்டு முறை மட்டுமே வரி குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

உலகளவில் 93.43 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு

 

இந்த கொரோனா காலத்தில், பெட்ரோல், டீசலின் பயன்பாடு 70 சதவிதம் குறைந்தது. கச்சா எண்ணெய்யின் விலை குறைந்த போது, எண்ணெய் நிறுவனங்கள் சுமார் 7 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு கச்சா எண்ணெய்யை குறைந்த விலையில் வாங்கி இருப்பு வைத்துள்ளன. இதே காலத்தில், இந்தியாவின் ஒட்டு மொத்த தேவையில், 20 சதவித எரிபொருளை இந்தியா சேமித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading