வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தமிழ்நாட்டில் 74 இடங்களில் ஐ.டி ரெய்டு!

வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தமிழ்நாட்டில் 74 இடங்களில் ஐ.டி ரெய்டு!

சரவணா ஸ்டோர்ஸ்

சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இந்தச் சோதனைக்கு உள்ளாகியுள்ளன.

 • News18
 • Last Updated :
 • Share this:
  தமிழ்நாட்டில் சில ரியல் எஸ்டேட் குழுமங்கள் மற்றும் சில்லறை பொருள் விற்பனை நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை 74 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

  வருமான வரி துறையினரின் இந்தச் சோதனையானது சென்னையில் 72 இடங்களிலும், கோயம்புத்தூரில் 2 இடங்களில் நடைபெற்று வருகிறது. முக்கியமான சில்லறை விற்பனை நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் இந்தச் சோதனைக்கு உள்ளாகியுள்ளன.

  சரவணா குழும நிறுவனர் யோகரத்தினம் பொன்னுதுரைக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தி வருகின்றனர் என்று தகவல்கள் கூறுகின்றன. 74 இடங்களிலும் 150-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

  சில வாரங்களுக்கு முன்பு பிரபல சரவண பவன் ஹோட்டல் கிளைகளிலும் வருமான வரித் துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க: பஞ்சாப் நேஷனல் வங்கி லாக்கர்களை உடைத்து கொள்ளை
  Published by:Tamilarasu J
  First published: