இடைக்காலப் பட்ஜெட் 2019: மாத சம்பளதாரருக்கு வருமான வரி வரம்பு அதிகரிக்குமா?

இதை வைத்து பார்க்கும் போது 2019 ஆண்டுத் தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்ய உள்ள இடைக்காலப் பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு கண்டிப்பாக உயர அதிக வாய்ப்புகள் உள்ளது.

Web Desk | news18
Updated: January 8, 2019, 10:24 PM IST
இடைக்காலப் பட்ஜெட் 2019: மாத சம்பளதாரருக்கு வருமான வரி வரம்பு அதிகரிக்குமா?
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: January 8, 2019, 10:24 PM IST
2014-ம் ஆண்டுத் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட்டை மன்மோகன் சிங் தலைமையிலான அரசு தாக்கல் செய்த போது நடுத்தர மக்களுக்கு வருமான வரி வரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்தது. அப்போதையை மத்திய அரசு அப்படி ஒரு அறிவிப்பை வெளியிடவில்லை.

பட்ஜெட் அறிவிப்புகள் வெளியான உடன் பாஜக இதைக் கடுமையாக விமர்சித்தது. ஆனால் 2014-ம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த மத்திய அரசு இது வரை வருமான வரி வரம்பை 5 லட்சம் வரையில் உயர்த்தவில்லை என்றால் கூடப் பரவாயில்லை 3 லட்சமாகக் கூட உயர்த்தவில்லை.

2014-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு பட்ஜெட் அறிவிப்புகளின் போதும் பாஜக தலைமையிலான மத்திய அரசு வருமான வரி வரம்பை 2.5 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சமாக உயர்த்தும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இருப்பினும் 2017-ம் ஆண்டுப் பட்ஜெட்டை தாக்கல் செய்த போது மத்திய அரசு 2.5 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் வரையிலான ஆண்டு வருமான கொண்டவர்களுக்கு 10 சதவீதமாக இருந்து வந்த வருமான வரியை 5 சதவீதமாக மட்டும் குறைத்துச் சலுகை வழங்கியது.

2019-ம் ஆண்டுப் பொதுத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடுத்தர மக்களின் வாக்குகளைக் கவர கண்டிப்பாகப் பட்ஜெட் 2019-ல் வருமான வரி வரம்பை 3 லட்சம் ரூபாயாக உயர்த்தும் என்று கூறப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் மத்திய அரசு 8 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ள உயர் சாதி பிரிவினருக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக அதிகரிப்பதற்கான மசோதாவைப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இதை வைத்து பார்க்கும் போது 2019 ஆண்டுத் தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்ய உள்ள இடைக்காலப் பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு கண்டிப்பாக உயர அதிக வாய்ப்புகள் உள்ளது.
Loading...
மேலும் பார்க்க: ஜுஸ் கடை போட்டு ATM கார்டு தகவல்களைத் திருடிய வடமாநில கும்பல்!
First published: January 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...