ஹோம் /நியூஸ் /வணிகம் /

தமிழக ஐபோன் உதிரிபாக ஆலையில் 45,000 பெண் பணியாளர்களைச் சேர்க்கும் டாடா!

தமிழக ஐபோன் உதிரிபாக ஆலையில் 45,000 பெண் பணியாளர்களைச் சேர்க்கும் டாடா!

ஓசூர் ஐபோன் ஆலை

ஓசூர் ஐபோன் ஆலை

ஓசூரில் உள்ள டாடா குழுமத்திற்கு சொந்தமான ஆலையில், 18 முதல் 24 மாதங்களுக்குள் 45,000 பெண் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • hosur |

டாடா குழுமம், தென்னிந்தியாவில் உள்ள ஐபோன் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் தனது எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. Apple Inc-ல் இருந்து அதிக வணிகத்தை ஈட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக இதை செய்ய இருக்கிறது.

நிறுவனத்தின் புதிய உற்பத்திக் கோடுகளின் படி, தமிழ்நாட்டின் தொழில் நகரமான ஓசூரில் உள்ள டாடா குழுமத்திற்கு சொந்தமான ஆலையில், 18 முதல் 24 மாதங்களுக்குள் 45,000 பெண் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஓசூர் தொழிற்சாலை:

ஐபோன் ஹவுசிங்ஸ்/அஸ்ஸெம்பேல் செய்யும் போன் கேஸ்கள், உதிரி பாகங்களை  உற்பத்தி செய்யும் ஓசூர் தொழிற்சாலை, தற்போது சுமார் 10,000 தொழிலாளர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. அவர்களில் பெரும்பாலோர் பெண்கள். ஓசூர் ஆலை, செப்டம்பரில் சுமார் 5,000 பெண்களை பணியமர்த்தியது. இதில் வட மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

ஓசூர் தொழிற்சாலையில் பெண்களின் மொத்த சம்பளம் மாதம் 16,000 ரூபாய் ($194) ஆகும். இது இந்திய தொழில்துறை தொழிலாளர்களின் சராசரியை விட கிட்டத்தட்ட 40% அதிகம். தொழிலாளர்களுக்கு வளாகத்திற்குள் இலவச உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படுகிறது. மேலும் ஊழியர்களுக்கு டாடா தொழில் சார்ந்த மேம்பட்ட பயிற்சி மற்றும் கல்வியை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இனி WhatsApp-ல் உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பிக்கொள்ளலாம் - வெளியாகும் புதிய அம்சம்

அதிகரிக்கும் தேவை... இந்தியாவை சாரும் நிறுவனங்கள்:

ஆப்பிளின் முக்கிய உற்பத்தி பங்குதாரரான ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப், அதன் முக்கிய சீன ஆலை கோவிடால் பாதிக்கப்பட்டதில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில் விழாக்கால விற்பனையில் குறைபாடு வருமோ என அஞ்சுகிறது.

இதனால் சீனாவைத் தாண்டி இந்தியாவில் ஐபோன் பாகங்களை தயாரிப்பதை அதிகரித்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் நிதி ஊக்கத் திட்டத்தால் ஊக்கப்படுத்தப்பட்ட திட்டத்தால் இது மேலும் உந்தப்படுகிறது.. இதனால் தெற்காசிய நாட்டிலிருந்து ஐபோன் ஏற்றுமதியை அதிகரிக்க உதவியாக உள்ளது.

தனித்தனியாக, இந்தியாவில் ஐபோன்களை அசெம்பிள் செய்ய விரும்பும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி கூட்டு முயற்சியை நிறுவ விஸ்ட்ரானுடன் டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதை பயன்படுத்தி  அவர்களது தமிழக தொழிற்சாலையில் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Apple iphone, Hosur, TATA