லாபம் 54% உயர்வு: மகிழ்ச்சியில் டாடா ஸ்டீல்!

டாடா ஸ்டீல்

இன்றைய சந்தை நேர முடிவில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகள் 18.05 புள்ளிகள் (3.70 சதவீதம்) சரிந்து ஒரு பங்கு 469.55 ரூபாய் என வர்த்தகம் செய்யப்பட்டது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  டாடா ஸ்டீல் நிறுவனம் வெள்ளிக்கிழமை நடப்பு நிதி ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

  2018 அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மூன்றாம் காலாண்டில் டாடா ஸ்டீல் நிகர லாபம் 54.33 சதவீதம் உயர்ந்து 1,753.07 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

  இதே காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனம் 2017-2018 நிதி ஆண்டில் 1,135.92 கோடி ரூபாய் நிகர லாபத்தைப் பெற்றிருந்தது.

  சென்ற நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 30,552.03 கோடி ரூபாயை பதிவு செய்திருந்த டாடா ஸ்டீல் 2018-2019 நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 41,431.37 கோடி ரூபாய் வருவாயைப் பதிவு செய்துள்ளது.

  அதேநேரம் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு செலவும் 41,431.37 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே சென்ற ஆண்டு 30,552.03 கோடி ரூபாயாக இருந்தது.

  இன்றைய சந்தை நேர முடிவில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகள் 18.05 புள்ளிகள் (3.70 சதவீதம்) சரிந்து ஒரு பங்கு 469.55 ரூபாய் என வர்த்தகம் செய்யப்பட்டது.

  மேலும் பார்க்க: ரபேல் போர் விமானம் ஒப்பந்த விவகாரத்தில் புதிய திருப்பம்
  Published by:Tamilarasu J
  First published: