டிடிஎச் செட் டாப் பாக்ஸ் கட்டணங்களைக் குறைத்த டாடா ஸ்கை!

டாடா ஸ்கை

தகவல் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் டிராய் கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சேவைகளுக்கான கட்டணங்களை அண்மையில் திருத்தி அமைத்தது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  டாடா ஸ்கை நிறுவனம் டிடிஎச் செட் டாப் பாக்ஸ் தொடக்க கட்டணத்தை கனிசமாக குறைத்து அறிவித்துள்ளது.

  தகவல் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் டிராய் கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சேவைகளுக்கான கட்டணங்களை அண்மையில் திருத்தி அமைத்தது.

  அதனால் நாடு முழுவதும் கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சேவைகளின் கீழ் தொலைக்காட்சிகளைப் பார்க்க ஒரே கட்டணம் தான் என்றாலும் சேவைகளை தொடங்குவதற்கான கட்டணம் கேபிள் டிவியில் குறைவாகவும், டிடிஎச்-ல் அதிகமாகவும் இருந்தது.

  எனவே டிடிஎச் சேவைக்கான தொடக்கக் கட்டணத்தை குறைக்க முடிவு செய்த டாடா ஸ்கை நிறுவனம் Tata Sky SD செட் ஆப் பாக்ஸ் சேவையைப் பெற 2000 ரூபாயாக இருந்த கட்டணத்தை 1,499 ரூபாயாக குறைத்துள்ளது.

  எச்டி சேவையில் டிடிஎச் சேவையைப் பெறுவதற்கான செட் டாப் பாக்ஸ் கட்டணத்தை டாடா ஸ்கை 2,200 ரூபாயிலிருந்து 1,699 ரூபாயாக குறைத்து அறிவித்துள்ளது.

  ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சேமித்து பின்னர் நேரம் கிடைக்கும் போது பார்க்க கூடிய Tata Sky+ எச்டி செட் டாப் பாக்ஸ் சேவை தொடக்க கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் 9,300 ரூபாய்க்கே தொடரும் என்று டாடா ஸ்கை தெரிவித்துள்ளது. Tata Sky 4K செட் டாப் பாக்ஸ் சேவை தொடக்க கட்டணமும் 6,400 ரூபாயாகவே தொடருகிறது.

  அமேசான் பிரைம், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட், ஜீ5, வூட், சோனி லைவ், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஆன்லைன் வீடியோ சேவைகள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு டிடிஎச் மற்றும் கேபிள் டிவி இணைப்புகளை புதியதாக பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

  எனவே இதுபோன்ற கட்டண குறைப்புகள் மூலம் கேபிள் டிவி மற்றும் ஆன்லைன் வீடியோ சேவையை விரும்புபவர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் டாடா ஸ்கை செயல்பட்டு வருகிறது.

  அண்மையில் டாடா ஸ்கை நிறுவனம் அமேசான் ஃபைர் ஸ்டிக் - டாடா ஸ்கை பதிப்பை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் டாடா ஸ்கை சேவையுடன் 250 ரூபாய் கட்டணத்தில் அமேசான் பிரைம் சேவையையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

  மேலும் பார்க்க:
  Published by:Tamilarasu J
  First published: