ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் போட்டியாக டாடா ஸ்கை பிராட்பேண்ட்..!

டாடா ஸ்கை பிராட்பேண்ட் சேவை வேண்டும் என்ற வாடிக்கையாளர்கள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று பதிவு செய்வதன் மூலம் அவர்கள் வசிக்கும் இடத்தில் சேவையைப் பெற முடியுமா என்று அறிந்துகொள்ளலாம்.

ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் போட்டியாக டாடா ஸ்கை பிராட்பேண்ட்..!
டாடா ஸ்கை பிராட்பேண்ட்
  • News18
  • Last Updated: December 21, 2018, 5:24 PM IST
  • Share this:
டாடா ஸ்கை நிறுவனம் முதற்கட்டமாக சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, அகமதாபாத், போபால், காஜியாபாத், கிரேட்டர் நொய்டா, குர்கான், ஹைதராபாத், மிரா பயந்தர், தானே, நொய்டா மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட் என 14 நகரங்களில் பிராட்பேண்ட் இணையதளச் சேவையைத் தொடங்கியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாஃபைபர் பிராட்பேட் சேவைக்குப் போட்டியாகக் குறைந்த விலையில் இணையதளச் சேவையை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் டாடா ஸ்கை இந்த முடிவை எடுத்துள்ளது.

டாடா ஸ்கை பிராட்பேண்ட் சேவை வேண்டும் என்ற வாடிக்கையாளர்கள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று பதிவு செய்வதன் மூலம் அவர்கள் வசிக்கும் இடத்தில் சேவையைப் பெற முடியுமா என்று அறிந்துகொள்ளலாம்.


ஆக்ட் ஃபைபர் நெட், பிஎஸ்என்எல், பார்தி ஏர்டெல் மற்றும் பிற இணையதளச் சேவைகள் தங்களை ரிலையன்ஸ் ஜியோக்குப் போட்டியாகத் தயார் செய்து வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ என்ன தான் சலுகைகள் வழங்கினாலும் அதைத் தகர்த்து எரிய வேண்டும் எனத் திட்டம் தீட்டி வருகின்றன.

டிடிஎச் சேவையில் முதல் தனியார் நிறுவனமாக வந்த டாடா ஸ்கை தற்போது குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் பிராட்பேட் சேவையைத் தொடங்க உள்ளது. அது மட்டுமில்லாமல் தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிராட்பேண்ட் திட்டங்கள், வேகம் மற்றும் கட்டணம் உள்ளிட்ட விவரங்களையும் அளித்துள்ளது.

குறைந்தபட்சம் 999 ரூபாய் மாதம் எனத் தொடங்கும் டாடா ஸ்கை பிராட்பேண்ட் திட்டங்களின் கட்டணம் அதிகபட்சம் 18,0000 வரை உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் பார்க்க: நாட்டு கோழி வளர்ப்பில் புதிய சிக்கல்..!
First published: December 21, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading