ஹோம் /நியூஸ் /வணிகம் /

Tata Power-யின் சூரிய ஆற்றல் தீர்வுகள் எதிர்காலத்தில் இந்தியாவின் கிராமப்புறங்களை மேம்படுத்தும்.!

Tata Power-யின் சூரிய ஆற்றல் தீர்வுகள் எதிர்காலத்தில் இந்தியாவின் கிராமப்புறங்களை மேம்படுத்தும்.!

சூரிய ஆற்றல்

சூரிய ஆற்றல்

Tata Power's Solar Energy Solutions | கிராமப்புற இந்தியாவில் சுத்தமான நீர் கிடைப்பது ஒரு பெரிய சவாலாக உள்ளது, ஏனெனில் நீர் சுத்திகரிப்புக்கு அதிக ஆற்றல் தேவைப்படும். இங்கேயும்கூட சூரிய ஆற்றல் தன் பங்களிப்பை அளிக்கிறது.

 • News18 Tamil
 • 6 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  குறிப்பாக இந்திய மக்கள் வெயில் நாட்களை அதிகம் விரும்புவதில்லை,  ஆனால் அவற்றை மிகப்பெரிய பொருளாதார ஆதாயமாகப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு ஆண்டும் 300 வெயில் நாட்களைக் கொண்ட இந்தியாவின் சூரிய ஆற்றல் திறன் ஆண்டுக்கு 5000 டிரில்லியன் கிலோவாட்-மணிநேம் என்ற அளவில் உள்ளது. நமது புதைபடிவ எரிபொருள் கையிருப்புகள் அனைத்தையும் பயன்படுத்வதைக் காட்டிலும் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி ஒரு வருடத்தில் அதிக ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும் என்பதை இது குறிக்கிறது.

  தொலைதூர இணைப்பு இன்னும் செயல்பாட்டில் இருக்கும் ஒவ்வொரு கிராமப்புற குடும்பங்களின் வாழ்க்கையிலும் இது அபரிமிதமான வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடும்.

   சூரிய ஆற்றலும் ஆரோக்கியமும்

  கிராமப்புற இந்தியாவில் உள்ள மக்களுக்கு  இன்னும் கிரிட் இணைக்கப்பட்ட மின்சாரம் கிடைக்கப்பெறாததால் அவர்கள் மண்ணெண்ணெய், டீசல் மற்றும் விறகு அடுப்புகள் போன்றவற்றை நம்பியிருக்க வேண்டியுள்ளது, இது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பல உடல்நலக் கேடுகளை விளைவிக்கிறது. குறைந்த மூலதனச் செலவுகள் மற்றும் ஆக்கப்பூர்வமான விலை நிர்ணய உத்திகள் ஆகியவற்றிற்கு எதிரான ஒரு சிறந்த மாற்றாக சூரிய ஆற்றல் இருக்கலாம்.

  பொதுவாக, சூரிய ஆற்றலை ஒரு பரவலாக்கப்பட்ட வகையில் பயன்படுத்தலாம், இது பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது: அவை விளக்குகள், வெப்பமாக்கல், நீர் வடிகட்டல் மற்றும் உற்பத்தித்திறன். உதாரணமாக, சோலார் விளக்குகள் மண்ணெண்ணெய் விளக்குகளின் தேவையையும் அவற்றுடன் தொடர்புடைய எந்தவொரு அபாயத்தையும் நீக்குகிறது. வேலை நேரத்தை நீட்டித்து, கூடுதலாக 4-5 மணிநேரம் இந்த சோலார் விளக்குகளை ஒளிரச் செய்வதன் மூலம் வீட்டின் உற்பத்தித் திறனையும் வருமானத்தையும் அதிகரிக்கலாம்.

  கிராமப்புற இந்தியாவில் சுத்தமான நீர் கிடைப்பது ஒரு பெரிய சவாலாக உள்ளது, ஏனெனில் நீர் சுத்திகரிப்புக்கு அதிக ஆற்றல் தேவைப்படும். இங்கேயும்கூட சூரிய ஆற்றல் தன் பங்களிப்பை அளிக்கிறது. நாகாலாந்தில் சமீபத்தில் கோஹிமாவுக்கு அருகிலுள்ள சிசெமா கிராமத்தில் சூரிய ஆற்றலில் இயங்கும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவியது, இது சுத்தமான குடிநீரை உற்பத்தி செய்வதற்காக மேம்பட்ட சவ்வு வடிகட்டுதல் அமைப்பைப் பயன்படுத்துகிறது.

  சூரிய ஆற்றலும் வாழ்வாதாரமும்

   சோலார் மைக்ரோகிரிட்கள், சோலார் பம்புகள் மற்றும் சோலார் விளக்குகள் சிறியவை என்றாலும் நம்பமுடியாத ஆற்றல் மூலங்களின் ஒரு பகுதியாக உள்ளன.

   சோலார் மைக்ரோகிரிட்கள் என்பவை ஒருங்கிணைக்கப்பட்ட நெட்வொர்க்குகள் ஆகும், அவை முழு சமூகத்திற்கும் தேவையான சுத்தமான சூரிய ஆற்றலைச் சேகரித்து, சேமித்து விநியோகிக்கின்றன. உயர்தர சோலார் பேனல்களின் மைய "ஹப்" மூலம் இந்த ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது.

  பேட்டரிகள் மற்றும் ஒவ்வொரு குடும்பமும் அதிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றன.

   இந்தியாவில், சோலார் மைக்ரோகிரிட்கள் விலையுயர்ந்த பிரச்சனைக்கு செலவு குறைந்த தீர்வாக உள்ளன. Tata Power Renewable Microgrid நாட்டின் முன்னணி நிறுவனமாகும், எதிர்காலத்தில் 10,000 மைக்ரோகிரிட்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இது ஏற்கனவே 200 மைக்ரோகிரிட்களை நிறுவியுள்ளது, அவற்றில் பெரும்பாலானவை உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் உள்ளன, மேலும் ஒடிசாவில் உள்ள 10-15 கிராமங்களில் பைலட் மைக்ரோகிரிட் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மைக்ரோகிரிட்கள் வீடுகளுக்கு மட்டுமல்லாமல் வணிகங்கள், மருத்துவ கிளினிக்குகள் (குளிர்சாதன வசதிகள்), எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள், கல்வி வசதிகள் மற்றும் சாலையோர உணவகங்களுக்கும் மின்சாரம் வழங்குகின்றன. இது வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகளை அணுகுவதன் மூலம் அனைத்து குடும்பங்களுக்கும்  சராசரி வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கிறது.

   இந்தியாவின் விவசாயத் துறை இயற்கையான நீர்ப்பாசனத்திற்காக பருவமழையை பெரிதும் நம்பியுள்ளது. நீர்ப்பாசனத்திற்கு நீர் பாய்ச்ச செயற்கைப் பம்புகள் பயன்படுத்தப்படுகின்றன. பம்புகளை இயக்க விவசாயிகள் கிரிட் மின்சாரம் அல்லது டீசல் ஜென்-செட்களை நம்பியுள்ளனர், இது பெரும் தாமதத்திற்கும் பொருளாதார நெருக்கடிக்கும் வழிவகுக்கும். எனவே, நமது விவசாயிகளுக்கு, சோலார் வாட்டர் பம்ப் போன்ற பயனுள்ள நீர்ப்பாசன முறை ஒரு பெரிய வரப்பிரசாதமாகும். இது அவர்களின் வயல்களுக்கு நம்பகமான மற்றும் வற்றாத நீர் விநியோகத்தை உறுதி செய்வதன் மூலம் அவர்களின் பயிர் விளைச்சலை அதிகரிக்கிறது.

   ஸ்டாண்டலோன் சோலார் பவர் அக்ரி பம்புகள் இந்திய விவசாயிகளின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன மற்றும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 26 மில்லியன் அக்ரி பம்புகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றாக உள்ளன. இவற்றில் 10 மில்லியன் பம்புகள் டீசல் மூலம் இயங்குகின்றன. வெறும் 1 மில்லியன் டீசல் பம்புகளை சூரிய மின்சக்திக்கு மாற்றுவதன் மூலம்  9.4 பில்லியன் லிட்டர் டீசல் நுகர்வு குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம், இதன் விளைவாக விவசாயிகளுக்கு உடனடி செலவு மிச்சமாகும். இது 25.3 மில்லியன் டன்கள் CO2 ஐ சேமிக்கவும் உதவுகிறது.

   Tata Power Solar இந்த தேவையைப் பூர்த்தி செய்ய மேற்பரப்பில் பொருத்தப்பட்டு, நீரில் மூழ்கக்கூடிய வகைகளில் DC மற்றும் AC வகையிலான சோலார் வாட்டர் பம்புகளை வழங்குகிறது. இந்த பம்புகள் விலையுயர்ந்த எரிபொருட்களை விவசாயிகள் சார்ந்திருப்பதையும், வழக்கமான நீர்ப்பாசன முறைகளுக்கு மாறாக அவற்றின் பராமரிப்பு செலவுகளைக் குறைக்கவும் உதவுகின்றன. இன்றுவரை இந்தியா முழுவதும் 76,000க்கும்  மேற்பட்ட பம்புகள் நிறுவப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நீர் உத்தரவாதத்தையும், நிதிப் பாதுகாப்பையும் வழங்குவதே எங்கள் குறிக்கோள்.

   நமது இந்திய விவசாயிகளின் நீர்ப்பாசனத் தேவைகளுக்கு, நாட்டின் மிகத் தொலைதூரப் பகுதிகளில் கூட அவர்களுக்கு உதவுவதற்கும், அவர்களுக்கு எல்லா நேரங்களிலும் நிலையான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிப்பதற்கும், PM-KUSUM திட்டத்தின் கீழ் Tata Power  ஒரு எம்பானல் ஏஜென்சியாகவும் உள்ளது. கிராமப்புற, பகுதியளவு கிராமப்புற அல்லது நகர்ப்புறங்களில் சோலார் பம்புகளை உடனடியாக நிறுவ விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவை இப்போது சில்லறைச் சந்தைகளிலும் கிடைக்கின்றன.

   சூரிய ஆற்றலும் சூரிய தொழில்நுட்பமும் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் தாக்கத்தை  ஏற்படுத்துகிறது. இண்டர்நேஷனல் ரினீவபிள் எனர்ஜி ஏஜென்சியின் (IRENA) கூற்றுப்படி, இந்திய சூரிய ஆற்றல் துறை 2018ஆம் ஆண்டில் 1,15,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது, இது வரும் ஆண்டுகளில் தொடர்ந்து  அதிகரிக்கும். அதிகமான மக்கள் இந்த அமைப்புகளைப் பயன்படுத்துவதால், இந்த அமைப்புகளை நிறுவி சரிசெய்யக்கூடிய தொழில்நுட்பத் திறன் கொண்ட தொழிலாளர்களின் தேவை அதிகரிக்கும். Tata Power Skill Development Institute வழியாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் பணிபுரிய ஒவ்வொரு ஆண்டும் 3000 இளைஞர்களுக்கு Tata Power பயிற்சியளிக்கிறது. மேலும் GOI ஆனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் மற்றும் கிராமப்புற இளைஞர்களை இலக்காகக் கொண்ட பல மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறது.

   சூரிய ஆற்றலும் இந்தியப் பொருளாதாரமும்

   இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து மதிப்புச் சங்கிலியில் மேலே செல்லும்போது, எரிசக்தி தேவைகளும் அதிகரிக்கும். 19வது மின்சார ஆய்வு அறிக்கையின்படி, அகில இந்திய அளவில் 2016-17, 2021-22 மற்றும் 2026-27 ஆம் ஆண்டுகளில் மின்சார நுகர்வின் அளவு முறையே 921 BU, 1300 BU மற்றும் 1743 BU என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2036-37ல் 3049 BU ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, 2021-22ல் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தி திறன் 1491 BU ஆக மட்டுமே. இனி நிலக்கரி மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களை இந்தியா சேர்க்காது என்பதால், இந்த தேவையைப் பூர்த்தி செய்ய பொருளாதார ரீதியாக சாத்தியமான ஒரே வழி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்துவது மட்டுமே.

   2019 ஆம் ஆண்டில், உலகளவில் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்தது, இதில் சூரிய ஆற்றலும் காற்றாலை மின்சாரமும்  முன்னணியில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 450 ஜிகாவாட் ஆற்றலை உற்பத்தி செய்வதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளார். 2030 ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தற்போதைய திறனை விட ஐந்து மடங்கு அதிகரிக்கும். இந்த நிலையை அடைந்தால், இந்தியா தனது பாரிஸ் உறுதிமொழியில் குறிப்பிட்ட 40% இலக்கைத் தாண்டி, 2030ஆம் ஆண்டளவில் அதன் 60% மின்சாரத்தைப் புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யும். எரிபொருள் விலை முன்னெப்போதையும் விட நிச்சயமற்றதாக இருக்கும் நேரத்தில், இந்தியா எரிபொருள் இறக்குமதிச் செலவுகளில் இருந்து சேமிக்கும் என்பதை இது குறிக்கிறது.

   ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் SDG முதலீட்டு வரைபடத்தின்படி, சுத்தமான எரிசக்தியில் $700 பில்லியனுக்கும் அதிகமான தனியார் முதலீட்டு வாய்ப்பை இந்தியா மட்டுமே வழங்குகிறது. இது சூரிய ஆற்றல் சவாலுக்கு எதிரான இந்தியாவின் எழுச்சிவளரும் நாடு தனது பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டின் நலனுக்காகவும் அதன் ஆற்றல் தேவைகளை எவ்வாறு நிலையாகப் பூர்த்தி செய்ய முடியும் என்பதை உலகின் பிற நாடுகளுக்கு நிரூபிக்க இந்தியாவுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும். பாரிஸ் காலநிலை மாநாட்டின்போது, GOI நமது மின்சாரத்தில் 40%ஐ புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்களிலிருந்து உற்பத்தி செய்ய விரும்புவதாக அறிவித்தபோது, பலர் வியப்பில் திகைத்தனர். இருப்பினும், இந்த விஷயத்தில் அபரிமிதமான முன்னேற்றம் அடைந்து வரும் Tata Power போன்ற தனியார் நிறுவனங்கள் வழங்கும் ஆதரவைக் கருத்தில் கொண்டு GOIயினால் இந்த உறுதிமொழியைச் செய்ய முடிந்தது.

   கிராமப்புறங்களில் நிறுவிய ஏறத்தாழ 200 மைக்ரோகிரிட்கள் உடன், Tata Power ஏற்கனவே தான் நிறுவிய திறனில் 1000MW அளவை மேற்கூரை சோலார் நிறுவல்கள் மூலம் அடைந்துள்ளது, இதன் மூலம் இது இந்தியாவின் நம்பர் 1 சோலார் EPC நிறுவனமாக கடந்த 8 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த நிறுவல்கள் மூலம் மட்டுமே, Tata Power வாடிக்கையாளர்கள் தங்களின் சராசரி மின்சாரக் கட்டணத்தில் 50% வரை சேமித்து, 30 மில்லியன்+ டன்கள் அளவிலான CO2 ஐச் சேமித்துள்ளனர்.

   முழுச் சேவை நிறுவல் மற்றும் பழுதுபார்ப்பு, முன் செலவுகளைக் குறைக்கும் புதுமை விலை மற்றும் 25 ஆண்டுகால உத்தரவாதம் ஆகியவற்றின் மூலம், ஒரே நேரத்தில் பசுமை எரிசக்தி எதிர்காலத்திற்கு எதிராக இந்தியாவை மாற்றுவதற்கு Tata Power உதவுகிறது.

   4GW சோலார் செல் மற்றும் மாட்யூல் உற்பத்தி திறனை ஒரு தோராயமான  முதலீட்டில் அமைக்கிறது. அதாவது ரூ 3,400 கோடியில். இது, சூரிய மின்கலம் மற்றும் பேட்டரி இறக்குமதியை இந்தியா சார்ந்திருப்பதைக் குறைக்கும். இந்த கட்டுரையின்படி, Tata Power 5114 MW சுத்தமான ஆற்றல்  திறன் மற்றும் 2000+ EV சார்ஜிங் நிலையங்களைக் கொண்டுள்ளது. Tata Power இல் உள்ள Clean Energy Incubation Center ஆனது, உலகின் ஆற்றல் உற்பத்தி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் இந்தியாவை முன்னிலைப்படுத்தும் பசுமை ஆற்றல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் அடுத்த திட்டத்தை ஆதரிக்கிறது.

   முடிவுரை

   Tata Power நிறுவனத்தைப் பொறுத்தவரை, நிலைத்தன்மைக் கோட்பாடுகள் ஆழமானவை. "ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஜாம்செட்ஜி டாடாவின் தொலைநோக்குப் பார்வை Tata Power நிறுவனத்தின் நிலைப்புத்தன்மைக்கு அடித்தளமாக உள்ளது. நம் நாட்டு மக்களுக்குச் சுத்தமான, அதிகளவிலான எரிசக்தியை மலிவு விலையில் வழங்குவதே எங்களின் நோக்கம். காலநிலை மாற்றம் உலகளாவிய பிரச்சனையாக இருப்பதால், அதன் விளைவு இன்று மிக அதிகமாக உள்ளது என்று Tata Power நிறுவனத்தின் CEO & MD டாக்டர் பிரவீர் சின்ஹா, Network18 உடனான சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார்.

   Tata Power போர்ட்ஃபோலியோ தற்போது 32% பசுமை ஆற்றலைக் கொண்டுள்ளது, மேலும் 2030ஆம் ஆண்டில் 70% ஆகவும்,  2045ஆம் ஆண்டில் 100% ஆகவும் இது அதிகரிக்கும். Tata Power நிறுவனம் 2045ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜியத்தை எட்டுவதை இலக்காகக் கொண்ட இந்தியாவின் முதல் நிறுவனம் ஆகும். பசுமையான மூலப்பொருட்கள் மற்றும் தீர்வுகளின் பரவலான பயன்பாட்டின் மூலம் மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு நிலையான வாழ்க்கை முறை "அடையக்கூடியதாக" மாறும். இதை விளக்கும் வாசகம்தான் சஸ்டெய்னபிள் இஸ் அட்டெய்னபிள். இதுவே அதிகளவிலான மக்களுக்கு Tata Power ஊக்குவிக்க விரும்பும் ஒரு மனநிலையாகும். குறைந்தளவுக் கட்டணத்தில் பசுமை மின்சாரத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்கள் இந்த முன்முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.

   தூய்மையான மூலப்பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திறன் அதிகரித்து, இங்குள்ள மக்களும் வணிகங்களும் பசுமை ஆற்றலை மேலும் மேலும் தேர்வு செய்வதால், இந்தியா எதிர்காலத்தை நோக்கி மெதுவாக முன்னேறுகிறது.

  Promoted Content 

  Published by:Selvi M
  First published:

  Tags: TATA, Technology