ஜேக்குவார் லேண்ட்ரோவரால் ரூ. 26,961 கோடி நஷ்டம் அடைந்த டாடா மோட்டார்ஸ்!

டாடா மோட்டார்ஸ்

26 ஆண்டுகள் கழித்து, டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
டாடாவின் கவுரவமாகக் கருதப்படும் ஜேக்குவார் லேண்ட்ரோவர் சொகுசு கார் நிறுவனத்தால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது.

1993-ம் ஆண்டிற்குப் பிறகு 26 ஆண்டுகள் கழித்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனப் பங்குகள் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமான ஜேக்குவார் லேண்ட்ரோவர் சொகுசு கார் நிறுவனத்தில் ஏற்பட்ட இழப்பு காரணமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் ரூ. 26,961 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

1999-ம் ஆண்டு, தனது கார் தொழிலை ஃபோர்டு நிறுவனத்திடம் விற்பனை செய்ய முடிவு செய்தபோது, ரத்தன் டாடாவை ஃபோர்டு நிறுவனத்தினர் ஏளனம் செய்தனர். 9 ஆண்டுகள் கழித்து, 2008-ம் ஆண்டு ஃபோர்டு நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்தபோது, ஃபோர்டு நிறுவனத்தின் ஜேக்குவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தை டாடா மோட்டார்ஸ் வாங்கியது.

இப்படி, டாடாவின் கவுரவமாக பார்க்கப்பட்ட ஜேக்குவார் லேண்ட்ரோவர், சீனாவில் தனது கார்களின் விற்பனை சரிவால் ஏற்பட்ட நஷ்டம் , பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து மின்சார வாகனங்களுக்கு மாறும் தொழில்நுட்பத்தில் செய்த முதலீடுகள், முதலீட்டுக்காக வாங்கிய கடன் அதிகரிப்பு போன்ற காரணங்களால், சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் தனது சொத்து மதிப்பில் சரிவை கண்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் கார்களின் விற்பனை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. ஆனால் ஜேக்குவார் லேண்ட்ரோவர் கார்களின் விற்பனை ஒவ்வொரு மாதமும் குறைந்து வருகிறது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன்காரணமாக இன்று டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 29 சதவிதம் வரை சரிந்தன. ஜேக்குவார் லேண்ட்ரோவர் தொடர்ந்து டாடாவின் கவுரவமாகவே தொடருமா அல்லது நானோ கார்களை போல் ஓரங்கட்டப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் பார்க்க: பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு...
Published by:Tamilarasu J
First published: