முகப்பு /செய்தி /வணிகம் / “இந்தியாவிலேயே விரைவில் iphone தயாரிக்கும் பணி துவக்கம்“ - தீவிர பேச்சுவார்த்தையில் டாடா குழுமம்.!

“இந்தியாவிலேயே விரைவில் iphone தயாரிக்கும் பணி துவக்கம்“ - தீவிர பேச்சுவார்த்தையில் டாடா குழுமம்.!

ஐபோன்

ஐபோன்

Tata Group | புகழ் பெற்ற நிறுவனமான டாடா குழுமம், இந்தியாவில் ஐபோன்களை (iphone) அசெம்பிள் செய்யும் பணிகளைத் துவங்குவதற்காக எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி கூட்டு முயற்சி ஆலை ஒன்றை நிறுவுவதற்கு விஸ்ட்ரான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மக்களும் தங்களை அப்பேட் செய்து வருகின்றனர். குறிப்பாக விதவிதமான மாடல்களில் வலம் வரும் போன்களை வாங்குவதற்கே தனிக்கூட்டம் உள்ளது. அதிலும் ஐபோன்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. இதனை வாங்குவதற்காகவே வாடிக்கையாளர்கள் பலர் உள்ள நிலையில், விதவிதமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூட போன்களை ஆப்பிள் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டுவருவது வழக்கம்.

சமீபத்தில் iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro and iPhone 14 Pro Max ஆகிய மாடல் போன்கள் ஆப்பிள் நிறுவனத்தின் Far Out 2022 ல் அறிமுகம் செய்தது. உலகளவில் ஜாம்பவன்களாக வலம் வரக்கூடிய ஐபோன்களின் முதன்மை உற்பத்தியாளராக சீனாவை பெரிதும் சார்ந்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். இச்சூழலில் தான், தெற்காசிய நாடுகளில் ஐபோன் உற்பத்திகளை ஏன் மேற்கொள்ளக்கூடாது? என்ற மனநிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆப்பிள் நிறுவனத்திற்காக பல வகையான ஐபோன்களை உற்பத்தி செய்யும் ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் உளளிட்ட சில இந்திய கூட்டாளி நிறுவனங்கள் உள்ள நிலையில், இந்தியாவின் முக்கிய நிறுவனமான டாடா குழுமம் ஆப்பிள் ஐபோனை விரைவில் இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவில் ஐபோன் தயாரிக்க டாடா குழுமம் விஸ்ட்ரான் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையை நடத்தியது. ஐபோன்களை (iphone) அசெம்பிள் செய்யும் பணிகளைத் துவங்குவதற்காக எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி கூட்டு முயற்சி ஆலை ஒன்றையும் நிறுவுவதற்கான முயற்சி நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தை வெற்றியாகும் பட்சத்தில் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களைத் தயாரிக்கும் முதல் இந்திய நிறுவனமாக டாடா குழுமம் உருவாகக்கூடும். தற்போது முக்கியமாக தைவானிய உற்பத்தி நிறுவனங்களான விஸ்ட்ரான் மற்றும் ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப் போன்ற நிறுவனங்களால் சீனாவிலும் இந்தியாவிலும் அசெம்பிள் செய்யப்படுகின்றன.

Also Read : அலர்ட்! பொது இடங்களில் உள்ள சார்ஜிங் பாயிண்ட்டை பயன்படுத்தினால் உங்கள் டேட்டா திருடப்படலாம்

இதோடு இந்தியாவில் விஸ்ட்ரான் நிறுவனத்தின் பங்குகளை டாடா குழுமம் வாங்கும் பட்சத்தில், இவ்விரு நிறுவனங்களும் இங்கு அசெம்பிளி யூனிட்டை உருவாக்கும். இதன் மூலம் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க முடியும். தற்போது டாடா குழுமம் நடத்தியுள்ள பேச்சுவார்த்தையின் படி, தயாரிப்பு மேம்பாடு, விநியோகச் சங்கிலி மற்றும் அசெம்பிளி ஆகியவற்றில் விஸ்ட்ரானின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Also Read : இந்த விஷயத்திற்காக உங்கள் QR code-ஐ ஸ்கேன் செய்யாதீங்க - SBI எச்சரிக்கை

இது இந்தியாவில் விஸ்ட்ரான் உருவாக்கி வரும் ஐபோன்களின் எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு அதிகமாக அசெம்பிள் செய்யப்பட்ட ஐபோன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே முக்கிய நோக்கமாக உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான நிறுவனமாக டாடா நிறுவனம் இயங்கிவருகிறது. ,இந்நிலையில் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை தொடங்கினால் நிச்சயம் வாடிக்கையாளர்கள் அச்சமின்றி வாங்குவார்கள். மேலும் உற்பத்தியை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு உதவும் பட்சத்தில் இந்தியா முதன்மை நாடாக அமையும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.

First published:

Tags: Apple iphone, India, TATA