முகப்பு /செய்தி /வணிகம் / மீண்டும் ஆட்குறைப்பு? : டிசிஎஸ் நிறுவனம் கொடுத்த விளக்கம்!

மீண்டும் ஆட்குறைப்பு? : டிசிஎஸ் நிறுவனம் கொடுத்த விளக்கம்!

டிசிஎஸ்

டிசிஎஸ்

TCS : டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் ஆட்குறைப்பு தற்போதைக்கு இல்லை என்று அந்நிறுவனத்தின் மனிதவள பிரிவு அதிகாரி மிலிந் லக்கார்ட் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

முன்னணி நிறுவனங்களின் ஒன்றான டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். உலகின் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்து வரும் நிலையில் ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்டவர்களை தங்கள் நிறுவனத்துக்கு எடுக்க டிசிஎஸ் முன்னுரிமை அளிப்பதாகவும் டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவள பிரிவு அதிகாரி மிலிந் தெரிவித்துள்ளார்.

டிசிஎஸ் நிறுவனத்தில் ஒருபணியாளர் சேர்ந்துவிட்டால் அவருக்கு உரியத் திறமைகள் இல்லாதபட்சத்தில் அவரை உடனடியாக வேலையை விட்டு நீக்காமல் அவரின் திறமைகளை வளர்த்துக்கொள்ளப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

டிசிஎஸ் நிறுவனத்தில் கடந்தாண்டு மட்டும் புதிதாக 2 லட்சம் பேரைப் புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்டுள்ள நிலையில், 1 லட்சத்து 19 ஆயிரம் பேர் பயிற்சியாளர்களாக உள்ளனர். அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியில் இருந்து நீக்கப்பட்ட இந்தியர்களை தங்கள் நிறுவனத்தில் சேர்த்து அவர்களின் H1 விசா பிரச்னைகளை முடிக்க டிசிஎஸ் முன்னுரிமை அளித்து வருவதாகவும் மிலிந்த் கூறியுள்ளார்.

Also Read : காளான் வளர்ப்பில் இவ்வளவு லாபம் கிடைக்குமா? புதுக்கோட்டை இளைஞர் சொன்ன பிசினஸ் ஐடியா!

டிசிஎஸ்ஸில் இருந்துகொண்டே வேறு நிறுவனத்துக்கு வேலை செய்யும் பணியாளர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளார். பல முன்னணி நிறுவனங்கள் தற்போது ஆட்குறைப்பு செயலில் ஈடுபட்டு வரும் நிலையில் டிசிஎஸ்ஸின் இந்த முடிவு ஊழியர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

First published:

Tags: Tata consultancy services, TCS