தமிழரால் டாடா குழுமத்தின் மதிப்பு ரூ.2,28,577 கோடியாக உயர்வு!

டாடா குழுமம்

டாடா குடும்பம் இல்லாத ஒருவர் டாடா குழுமத்தின் தலைவராக முதல் முறை பொருப்பேற்ற பெருமை சந்திரசேகரனுக்கு உண்டு.

  • News18
  • Last Updated :
  • Share this:
டாடா குழுமத்தின் தலைவராக தமிழகத்தின் சந்திரசேகரன் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், டாடா குழுமம் 21 சதவிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 21 சதவிதம் அதிகரித்துள்ளதாக டாடா குழும தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் டாடா நிறுவனத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி வெளியேற்றப்பட்டு 2017 பிப்ரவரி 21ம் தேதி டாடா நிறுவனத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த சந்திரசேகரன் பதவியேற்றார்.

டாடா குழுமத்தை சேர்ந்த 28 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்நிலையில், 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டாடா குழுமத்தில் சந்தை மதிப்பு 8 லட்சத்து 47 ஆயிரத்து 175 கோடியாக இருந்த நிலையில், 2 ஆண்டுகளில் 21 சதவிதம் அதிகரித்து 10 லட்சத்து 88 ஆயிரத்து 446 கோடியாக அதிகரித்துள்ளது.

அதில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் 7 லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கடந்த 2 ஆண்டு வளர்ச்சியில் டாடா குழுமத்தை சேர்ந்த டைட்டன், வோல்டாஸ், ஓரியண்ட் ஹோட்டல்ஸ், இந்தியா ஹோட்டல்ஸ் போன்ற நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

டாடா குழுமத்தின் தலைவராக பொருப்பேற்க்கும் முன்பு சந்திரசேகரன் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். டாடா குடும்பம் இல்லாத ஒருவர் டாடா குழுமத்தின் தலைவராக முதல் முறை பொருப்பேற்ற பெருமை சந்திரசேகரனுக்கு உண்டு.

மேலும் பார்க்க: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தால் ரூ.1 லட்சம் அபராதம்...
Published by:Tamilarasu J
First published: