Home /News /business /

Tata Ace Gold Diesel Plus பல தொழில்துறையின் முதல் சலுகைகளுடன் கிடைக்கிறது

Tata Ace Gold Diesel Plus பல தொழில்துறையின் முதல் சலுகைகளுடன் கிடைக்கிறது

Tata Ace Gold Diesel +

Tata Ace Gold Diesel +

Tata Ace Gold Diesel Plus ஆனது 14.7Kw அதிகளவு மின்சாரம், 45NM பிக்அப் மற்றும் 27.5%கிரேடபிலிட்டியை வழங்குகிறது, அதாவது அதிக சுமை தாங்கும் திறன் மற்றும் அதிக சாய்வுகளில் சிறந்த திசையமைவு மாறுவீதத்தை வழங்குகிறது. இது சான்றளிக்கப்பட்ட 750kg லோடு-கேரியிங் கெப்பாசிட்டி கொண்ட எளிய 2-சிலிண்டர் எஞ்சினைக் கொண்டுள்ளது மற்றும் வலுவான லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் உடன் வருகிறது.

மேலும் படிக்கவும் ...

    டீசல், CNG மற்றும் பெட்ரோல் என பல்வேறு எரிபொருள் மாறுபாடுகள் மூலம் இந்திய வணிக வாகனத் துறை மாறி வருகிறது. எதிர்காலத்தில் மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களைக்கூட வாடிக்கையாளர்கள் தற்போது எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், வணிக வாகனங்களை வாங்குதல் என்று வரும்போது நமது நாடு ‘டீசலே உயிர்’ என்பது போல டீசலையே அதிகளவு நம்பியிருக்கிறது.


    சிறு வணிக வாகனத் துறையில் சின்ன யானை என்றழைக்கப்படும் Tata Ace இன்றுவரை 23 இலட்சம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது, மற்றும் டீசல் மாறுபாட்டின் ஆதிக்கத்தில் பெரும் பங்கு வகித்துள்ளது. தற்போது, டீசல் விலையை அரசு சமீபத்தில் குறைத்துள்ளதால், டீசல் வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக வாகனங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், இது ஒறு சிறப்பான மாற்றத்தைக் கொண்டு வருமா? ஆம், சமீபத்திய Ace Gold Diesel plus ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம், ஒருவர் அதிக அப்டைம், அதிக மைலேஜ் மற்றும் அதிக வருமானத்தைப் பெற முடியும். எனவே இனிமேலும் நீங்கள் எதற்காக காத்திருக்க வேண்டும்? டீலர்ஷிப்களை அணுகுங்கள் அல்லது Diesel plus பற்றி இங்கே மேலும் தெரிந்துகொண்டு, அதை இப்போதே உங்கள் வீட்டிற்கு கொண்டு வாருங்கள்!

    Tata Ace Gold Diesel Plus

    எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அப்டைம், அதிக மைலேஜ் மற்றும் அதிக வருவாயை வழங்குவதற்காக, Tata Ace Gold Diesel Plus, தற்போதுள்ள Ace Gold Diesel ஐ விடச், சிறந்த தொழில்நுட்பத்துடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, கூடுதல் அம்சத்துடன் வருகிறது.

    Tata Ace Gold Diesel+ ஆனது 14.7Kw அதிகளவு மின்சாரம், 45NM பிக்அப் மற்றும் 27.5%கிரேடபிலிட்டியை வழங்குகிறது, அதாவது அதிக சுமை தாங்கும் திறன் மற்றும் அதிக சாய்வுகளில் சிறந்த திசையமைவு மாறுவீதத்தை வழங்குகிறது. இது சான்றளிக்கப்பட்ட 750kg லோடு-கேரியிங் கெப்பாசிட்டி கொண்ட எளிய 2-சிலிண்டர் எஞ்சினைக் கொண்டுள்ளது மற்றும் வலுவான லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் உடன் வருகிறது.

    இதன் விலை ரூ. 5.68 இலட்சம் (எக்ஸ்-ஷோரூம் விலை). ஒருவர் ரூ. 45000/- முன்பணம் செலுத்தி இதை வாங்கலாம் மற்றும் SBI யின் EMI பிளானைப் பயன்படுத்தி மாதாந்திரத் தவணைகளாக ரூ. 9855/- மட்டுமே செலுத்தலாம். Tata Ace Gold Diesel plus மூலம் ஒருவர் மாதத்திற்கு ரூ. 28000/- லாபம் ஈட்டலாம்.

    சிறந்தச் செயல்திறனை இயக்கி எளிமையாக லாபங்களை அடைய Tata Ace Gold Diesel+ உயர்ந்த BS6 தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. Tata Ace Gold Diesel+ அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கூடுதல் நன்மைகளானவை-

    கூடுதல் வருமானம் - Ace Gold Diesel + இன் கணிசமான உயர் செயல்பாட்டு நம்பகத்தன்மை காரணமாக வாடிக்கையாளர்கள் அதிக பயணங்களை இயக்க முடியும். இது அதிக வருமானத்திற்கு வழிவகுக்கும் உயர்ந்த தொழில்நுட்பத்தை வழங்குகிறது.

    கூடுதல் அப்டைம் - உயர்ந்த தொழில்நுட்பம் சாலையில் வாகனத்தின் நேரத்தை அதிகரித்து, பயணங்கள் மற்றும் வருவாய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

    கூடுதல் மைலேஜ் - இதன் BS6 உயர்ந்த தொழில்நுட்பம் 21-22kmpl என்ற அளவில் சிறந்த எரிபொருள் சிக்கனத்தைக் கொடுக்கும் அதிக ஆற்றல் திறனை வழங்குகிறது (T&C பொருந்தும்*).

    3yr/75000 ஃப்ரீடம் பிளாட்டினம் AMC - இந்த வகையான AMC இல் எங்கள் வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு வெறும் ரூ. 40/- செலுத்தி, 1500 km வரைக்கும் அல்லது வாங்கியதிலிருந்து 6 மாதங்கள் வரைக்கும், இவற்றில் எது விரைவில் எட்டப்படுகிறதோ அது வரை அப்டைம் உத்தரவாத நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் அவர்களுக்கு பிரேக்டவுன் ஒன்றிற்கு 1000 ரூபாய் இழப்பீடும் வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை ஒர்க்ஷாப் சேவை உத்தரவாதத்தையும் வழங்குகிறது, அதாவது வாடிக்கையாளரின் வாகனத்தை 24 மணி நேரத்திற்குள் தயார்படுத்துவதாக உறுதியளிக்கிறது, இந்தச் சூழ்நிலையில் ஏதேனும் பிரேக்டவுன் ஏற்பட்டால், அல்லது தவறினால் Tata motors வாடிக்கையாளருக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபாய் இழப்பீடு வழங்கும்.

    மற்ற Tata Motors வர்த்தக வாகனங்களைப் போலவே, Tata Ace Gold Diesel plus என்பதும் Sampoorna seva 2.0 முன்முயற்சியின் கீழ் பாதுகாக்கப்படுகிறது, இதன்கீழ் விரைவான பழுதுபார்ப்பு, சிறந்த சேவை, சிக்கலற்ற காப்பீடு மற்றும் ஓட்டுநர் நலம் ஆகியவற்றை வழங்கும் Tata Motors இன் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளான Tata Alert, Tata Zippy, Tata Kavach மற்றும் Tata Samarth போன்றவற்றை வாடிக்கையாளர் பெற முடியும்.

    இந்தியாவின் முன்னணி சிறிய வணிக வாகனத்தின் பெயருடன் மட்டுமே வரும் உறுதி மற்றும் நம்பகத்தன்மையுடன் Tata Ace Gold Diesel+ உங்கள் வணிகத்திற்கு அதிக அப்டைம், அதிக மைலேஜ் மற்றும் அதிக வருவாயை வழங்கட்டும். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் புத்தம் புதிய Ace ஐ வாங்கப் பதிவு செய்யவும்Tata Motors CV விற்பனைத் தளத்தைப் பார்வையிடவும்.
    Published by:Selvi M
    First published:

    Tags: Diesel, Tata motors, Vehicle

    அடுத்த செய்தி