தமிழகத்தில் நேற்று ஒருநாள் மட்டும் ரூ.189 கோடிக்கு மது விற்பனை..

இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் 189.38கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒருநாள் மட்டும் ரூ.189 கோடிக்கு மது விற்பனை..
டாஸ்மாக்
  • Share this:
தமிழகத்தில், நேற்று ஒரு நாள் மட்டும் 189 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. 

இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் மிக அத்தியாவசியம் தவிர பெரும்பாலான சேவைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், டாஸ்மாக் மது கடைகளும் இயங்க அனுமதியில்லை. இந்நிலையில், மதுப்பிரியர் நேற்றே மது பாட்டில்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.

நேற்று மட்டும் 189.38கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மதுரை மண்டலத்தில் மொத்தமாக 44.55 கோடி ரூபாய் விற்பனையும், திருச்சியில் 41.67 கோடி ரூபாய் விற்பனையும், சேலத்தில் 41.20 கோடி ரூபாய் விற்பனையும், கோவையில், 39.45 கோடி ரூபாய் விற்பனையும், சென்னை - 22.56 கோடி ரூபாய்க்கு மது விற்பனையும் நடந்திருப்பதாக தெரிவித்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம்.

ஜூலை மாத சனிக்கிழமைகள் 4-ஆம் தேதி 171 கோடி விற்பனையும், 11-ஆம் தேதி 178 கோடி விற்பனையும், 18-ஆம் தேதி 183 கோடி விற்பனையும், 25-ஆம் தேதி 177காேடி விற்பனையும், இம் மாதம் 1-ஆம் தேதி 189 காேடி விற்பனையும் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: August 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading