டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக இந்த ஆண்டு மட்டும் (ஏப்ரல்-அக்டோபர்) 3867 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் 10 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 1905 வழக்குகளும், 10 ரூபாய்க்கும் அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக 1962 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக மதுரையில் 1042 வழக்குகளும், சென்னையில் 811 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுவரை விற்பனையாளர்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மீதும் வழக்கு பதியப்படுகிறது. இருப்பினும் வழக்குகளால் பயனில்லை என்றும் கண்துடைப்பு நடவடிக்கை மட்டுமே என்றும் குடிமகன்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.