ரூபாய் நோட்டுகளில் மற்ற சுதந்திரப் போராட்ட தலைவர்களின் படத்தையும் அச்சிட வேண்டும் என கோரிக்கை வைத்தது ஒரு தமிழரா.ஆர்பிஐ வங்கி மறுத்து வந்த நிலையில் தற்போது உண்மை வெளியாகியுள்ளது.
ரூபாய் நோட்டுகளில் மற்ற சுதந்திர போராட்ட தலைவர்களின் படத்தையும் அச்சிட வேண்டும் என தமிழகத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் அளித்த பரிந்துரைக்கு, ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது. கடந்த சில நாட்களாக ரூபாய் நோட்டுக்களில் ரவீந்திரநாத் தாகூர், அப்துல்கலாம் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படத்தை அச்சிட வேண்டும் என டெல்லி ஐ.ஐ.டி. பேராசிரியர் ஒருவர் கொடுத்த பரிந்துரையின் பேரில் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக தகவல்கள் உலா வருகின்றன.
இதனை ஆர்.பி.ஐ.யும் மறுத்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தைச் சேர்ந்த அதுவும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் தான் அந்த பரிந்துரையை அனுப்பியது தெரியவந்துள்ளது. சுதந்திரத்திற்காக போராடிய மற்ற தலைவர்களின் புகைப்படத்தையும் அச்சிட வேண்டும் என வெளிநாட்டு பணத்துடன் ஒப்பிட்டு ஆதாரப்பூர்வமாக ரிசர்வ் வங்கிக்கு 149 பக்கங்கள் கொண்ட பரிந்துரையை நித்யானந்தம் அனுப்பியிருக்கிறார்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த பரிந்துரையை பெற்றுக் கொண்ட ரிசர்வ் வங்கி அவருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளதோடு, இது குறித்து ஆலோசனை நடத்திய நடத்தி முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளது.
இந்நிலையில் நித்தியானந்தம் அவர்களுக்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா எழுதிய கடிதமும் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.