முகப்பு /செய்தி /வணிகம் / பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.. தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள்?

பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.. தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள்?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Union Budget 2023 | நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வரும் நிலையில், பட்ஜெட் அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கான முக்கிய அறிவிப்புகளை பார்ப்போம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் ஆகும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், மோடி அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவே.

தமிழ்நாட்டில் பஞ்சுக்கான வரியை குறைக்க வேண்டும் என ஜவுளித்துறையினரும், விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் விவசாயிகளும், தங்கத்திற்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என நகை வியாபாரிகளும், சாலை வசதியை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Budget 2023 Live: உடனுக்குடன் தகவல்கள் இங்கே

நிதியமைச்சர் நிர்மலா நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வரும் நிலையில், பட்ஜெட் உரையில் தமிழ்நாடு தொடர்புடைய பிரத்யேக அறிவிப்புகள் ஏதும் இல்லை. இருப்பினும் பல்வேறு துறைகள் சார்ந்து முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:

1. மீனவர் மேம்பாட்டுக்காக 6 ஆயிரம் கோடி ரூபாயில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் புதிய துணை திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2. கடந்த 2014-ம் ஆண்டுமுதல் ஏற்படுத்தப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகள் உள்ள இடங்களில் புதிதாக செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

3. 740 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் 38 ஆயிரத்து 800 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

4. 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் துறைமுகங்கள், நிலக்கரி, உருக்கு, உரம் மற்றும் உணவுதானியத் துறைகளை இணைக்கும் 100 முக்கிய போக்குவரத்து கட்டமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

5. கூடுதலாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள், நீர் விமான தளங்கள் ஆகியவை ஏற்படுத்தப்படும்.

6. சிறப்பான நீதி நிர்வாகத்துக்காக 7 ஆயிரம் கோடி ரூபாயில் மின்னணு நீதிமன்றங்கள் திட்டத்தின் 3-ம் கட்டம் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

7. 5ஜி சேவைகளைப் பயன்படுத்தி செயலிகளை உருவாக்குவதற்காக பொறியியல் கல்வி நிறுவனங்களில் 100 ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.

8. மாற்று எரிசக்தி பயன்பாடு, கார்பன் வாயு வெளியேற்றம் இல்லாத சூழலை ஏற்படுத்துவது, எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றை மேற்கொள்ள முன்னுரிமை மூலதன நிதியுதவியாக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Nirmala Sitharaman, Union Budget 2023