BREAKING | தொழில் தொடங்கினால் மானியம் - முதல்வர் வெளியிட்ட புதிய தொழில் கொள்கை

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.

BREAKING | தொழில் தொடங்கினால் மானியம் - முதல்வர் வெளியிட்ட புதிய தொழில் கொள்கை
breaking
  • News18
  • Last Updated: September 7, 2020, 11:22 AM IST
  • Share this:
சர்வதேச நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வைக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு ஒரு புறம் இருந்தாலும், கடந்த 5 மாதங்களில் நாட்டிலேயே அதிகளவு முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்துவருகிறது.

5 மாதத்தில் 41 நிறுவனங்களோடு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 30ஆயிரத்து 664 கோடி முதலீடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு 15 % முதல் 18 % வரை மானியம் வழங்கப்படும்.


கோவை, கடலூர், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், ராணிப்பேட்டை, சேலம், திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், நீலகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் தொடங்கினால் 20 % முதல் 24 % மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: September 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading