தமிழகத்திற்கு 2019-20-ம் நிதியாண்டில் ரூ.12,303 கோடி ஜி.எஸ்.டி இழப்பீடு நிதி

வருவாய் குறைவில் மூன்றாமிடத்தில் உள்ள தமிழ்நாடு, 2018-19 நிதியாண்டில் மத்திய அரசிடம் 4 ஆயிரத்து 824 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடாக பெற்றிருந்தது.

தமிழகத்திற்கு 2019-20-ம் நிதியாண்டில் ரூ.12,303 கோடி ஜி.எஸ்.டி இழப்பீடு நிதி
ஜிஎஸ்டி
  • Share this:
ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையின் கீழ், தமிழகம் 2019-20ம் ஆண்டு நிதியாண்டில் 12 ஆயிரத்து 305 கோடி ரூபாயை இழப்பீடாக பெற்றுள்ளது,

ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறை அமலானபோது மாநில அரசுகளின் ஜிஎஸ்டி மாத வரி வருவாய் 14 சதவீதத்தை கடக்காவிட்டால், அதற்கேற்ப 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் ராஜஸ்தான், அஸ்ஸாமுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் வரி வருவாய் பெருமளவு வீழ்ச்சி அடைந்தது.

ராஜஸ்தானுக்கு 2018- 19 நிதியாண்டில் 2 ஆயிரத்து 280 கோடி ரூபாயும், 2019-20 நிதியாண்டில் 6 ஆயிரத்து 710 கோடி ரூபாயும் இழப்பீடாக மத்திய அரசு வழங்கியது. அது முந்தைய ஆண்டைவிட 194 சதவீதம் அதிகமாகும்.


இதுபோல் அஸ்ஸாமுக்கு 2018-19ல் 455 கோடி ரூபாயும், 2019 20ல் ஆயிரத்து 284 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது. இது முந்தைய ஆண்டை விட 182 சதவீதம் அதிகம் ஆகும்.

வருவாய் குறைவில் மூன்றாமிடத்தில் உள்ள தமிழ்நாடு, 2018-19 நிதியாண்டில் மத்திய அரசிடம் 4 ஆயிரத்து 824 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடாக பெற்றிருந்த நிலையில் 2019-20 நிதியாண்டில் 12 ஆயிரத்து 305 கோடி ரூபாயை இழப்பீடாக பெற்றுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 130 சதவீதம் அதிகமாகும். இதேபோல் கேரளா 130 சதவீதமும், கர்நாடகா 49 சதவீதமும் முந்தைய ஆண்டை விட அதிகமாக பெற்றுள்ளன.தமிழகத்துக்கு கடந்த நிதியாண்டில் 12 ஆயிரத்து 305 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டை விட 155 சதவீதம் அதிகமாகும். இழப்பீட்டை பெற்றதில் தமிழக அரசு முதல் மூன்றாம் இடத்திலும் ராஜஸ்தான், முதலிடத்திலும் அஸ்ஸாம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading