தமிழ்நாட்டின் அந்நிய நேரடி முதலீடு சரிவு

குஜராத் 249 சதவீதமும், ஆந்திர பிரதேசம் 300 சதவீதமும் அந்நிய நேரடி முதலீடு பெறுவதில் வளர்ச்சியைக் காண்பித்துள்ளன.

Web Desk | news18
Updated: February 6, 2019, 9:06 PM IST
தமிழ்நாட்டின் அந்நிய நேரடி முதலீடு சரிவு
அன்னிய நேரடி முதலீடு
Web Desk | news18
Updated: February 6, 2019, 9:06 PM IST
தமிழ்நாட்டில் அந்நிய நேரடி முதலீடு 2018-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் காலகட்டத்தில் 21 சதவீதம் சரிந்துள்ளது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு 2018-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் 10,892 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை கிளையிடமிருந்து கிடைத்த தரவுகள் கூறுகின்றன.

இதே காலகட்டத்தில் 2017-ம் ஆண்டுத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அந்நிய நேரடி முதலீடு 13,898 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நிதி ஆண்டில் தமிழ்நாட்டின் அந்நிய நேரடி முதலீடு பாதியாகச் சரிந்துள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.

ஆனால் இதே காலகட்டங்களில் குஜராத் 249 சதவீதமும், ஆந்திர பிரதேசம் 300 சதவீதமும் அந்நிய நேரடி முதலீடு பெறுவதில் வளர்ச்சியைக் காண்பித்துள்ளன.

மறுபக்கம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் அந்நிய நேரடி முதலீடுகள் 40 சதவீதம் வரை சரிந்துள்ளது.

“தமிழகத்தில் அந்நிய முதலீடு 21% சரிவு என மத்திய அரசு செய்தி வெளியிட்டிருக்கிறது. இதற்குத் தானா அ.தி.மு.க அரசு, பல கோடி ரூபாய் வீண் செலவு செய்து இரு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது? இதுதான் உங்கள் ஆட்சியின் லட்சணமா? முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?” என்று திமுகத் தலைவர் மு க ஸ்டாலின் டிவிட்டரில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியாவிலும் 2018-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் அந்நிய நேரடி முதலீடு 11 சதவீதம் வரை குறைந்துள்ளது என்று வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2018-19 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியா 22.66 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளது. அதில் 2.54 பில்லியன் டாலர் கணினி மற்றும் மென்பொருள் துறையும், 2.17 பில்லியன் டாலர் தொலைத்தொடர்பு துறை, சேவை துறையில் 4.91 பில்லியன் டாலரும், இரசாயன துறையில் 1.6 பில்லியன் டாலரும், ஆட்டோமொபைல் துறையில் 1.59 பில்லியன் டாலரும் அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது.

இந்தியாவில் அதிகம் முதலீடு செய்த வெளிநாடுகளில் சிங்கப்பூர் முதல் இடம் பிடித்துள்ளது.

மேலும் பார்க்க: 
First published: February 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...