முகப்பு /செய்தி /வணிகம் / வறுமை ஒழிப்பில் சாதனை படைத்த தமிழ் நாடு... வட மாநிலங்களின் நிலை என்ன?

வறுமை ஒழிப்பில் சாதனை படைத்த தமிழ் நாடு... வட மாநிலங்களின் நிலை என்ன?

ஐக்கிய நாடுகள் சபை 2015-ம் ஆண்டுக் கொண்டு வந்துள்ள இலக்குகளை இந்தியா 2030-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என இலக்கு நிர்ணைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை 2015-ம் ஆண்டுக் கொண்டு வந்துள்ள இலக்குகளை இந்தியா 2030-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என இலக்கு நிர்ணைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை 2015-ம் ஆண்டுக் கொண்டு வந்துள்ள இலக்குகளை இந்தியா 2030-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என இலக்கு நிர்ணைக்கப்பட்டுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நிதி ஆயோக் என அழைக்கப்படும் திட்ட கமிஷன் இரண்டும் இணைந்து வறுமை ஒழிப்பு, சமத்துவத்தை மேம்படுத்துவதில் நீடித்த வளர்ச்சியை அடைந்த மாநிலங்கள் எவை என்ற பட்டியலை வெளியிட்டன.

வறுமை ஒழிப்பு, சமத்துவத்தை மேம்படுத்துவதில் நீடித்த வளர்ச்சியை அடைந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ் நாடு, இமாசல பிரதேசம், கேரளா, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்கள் டாப் 5-ல் இடம்பெற்றுள்ளன.

சர்வதேச அளவில் வறுமை ஒழிப்பு, சமத்துவத்தை நிலை நாட்டும் 192 நாடுகள் பட்டியலில் இந்தியா 58 வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தக் குறியீடானது சுகாதாரம், பாலின சமன்பாடு, சுத்தமான ஆற்றல், கட்டுமானம், கல்வி, அமைதி என 17 பிரிவுகளில் மாநிலங்கள் அளிக்கும் முன்னுரிமை மற்றும் பெற்ற வளர்ச்சியைப் பொருத்து தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் வறுமையைக் குறைத்து, சமத்துவத்தை நிலைநாட்டுவதில் ஆந்திர பிரதேசம், கோவா, குஜராத், கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

நீடித்த வளர்ச்சி வழங்குவதில் தமிழ்நாடு, இமாசல பிரதேசம், கேரளா, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னிலை வகிக்கும் நிலையில், அசாம், பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மோசமாக செயல்படுகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்னைகளைத் தீர்ப்பதில் கோவா, மணிப்பூர், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. மேலும் இந்தப் பிரச்னையைச் சட்டீஸ்கர், ஒடிசா, மகாராஷ்ட்ரா மற்றும் யூனியன் பிரதேசங்களும் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகின்றனவாம். தமிழகம் இந்தப் பட்டியலில் இல்லை.

“பல மாநிலங்களில் இந்த இலக்குகள் குறித்த துல்லியமான புள்ளி விவரங்கள் இல்லாதது தரப்புள்ளிகளைத் தயாரிப்பதில் சிக்கல்களாக உள்ளது. அது மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் இந்தப் பட்டியலில் எந்த ஒரு இந்திய மாநிலங்களும் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபை 2015-ம் ஆண்டுக் கொண்டு வந்துள்ள இலக்குகளை இந்தியா 2030-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என இலக்கு நிர்ணைக்கப்பட்டுள்ளது.

உலகின் மக்கள் தொகையில், இந்தியாவில் 17 சதவீதத்தினரும், சீனாவில் 18.54 சதவீதத்தினர் உள்ளனர். இவ்வளவு மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் வறுமை ஒழிப்பு மற்றும் சமத்துவத்தை நிலை நாட்டுவது என்பது வேகமான வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தினால் மட்டுமே முடியும்” என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க: இன்ஸ்பெக்டரிடமிருந்து மனைவியை மீட்டு தாருங்கள்.. - கணவன் கண்ணீர்

First published:

Tags: Poverty, Tamil Nadu