தமிழ்நாட்டின் தற்போதைய கடன் எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தின் கடன் அதன் மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவிதமாக உள்ளது.

தமிழ்நாட்டின் தற்போதைய கடன் எவ்வளவு தெரியுமா?
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: February 7, 2019, 8:13 PM IST
  • Share this:
2019-20-ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழக அரசின் தற்போதைய கடன் எவ்வளவு? கடன் அதிகரிக்க காரணங்கள் என்ன?

  • 2006 அதிமுக ஆட்சியின் முடிவில் 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாக இருந்தது.  • 2011 ஆண்டு திமுக ஆட்சியின் முடிவில் 1 லட்சம் 14 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்தது.

  • அதிமுக ஆட்சியில், 2016-17ல் 3 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாயாகவும்,

  • 2019 மார்ச் மாதம் கடன் அளவு 3 லட்சத்து 55 ஆயிரத்து 844 கோடி ரூபாயாக கணிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகம் வாங்கியுள்ள கடனுக்கு ஆண்டிற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி செலுத்தப்படுகிறது


தமிழகத்தின் கடன் அதன் மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவிதமாக உள்ளது. 14 வது நிதி குழு பரிந்துரைப்படி தமிழகத்திற்கு கிடைத்த நிதி கணிசமான அளவு குறைந்திருப்பதால் நிதிச் சுமை அதிகரிப்பு, மின்சார வாரியம் செயல்படுத்திய உதய் திட்டம் காரணமாக கடன் சுமை அதிகரித்ததாக கடந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல், பொங்கல் பரிசு, கஜா புயல், வறட்சி போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கீடு, ஜி.எஸ்.டி.,யில் மாநில அரசிற்கு கிடைக்க வேண்டிய நிதி, மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ளது போன்றவை கடந்த 4 ஆண்டுகளாக தமிழக அரசின் நிதி நிலையில் வருவாய் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு பக்கம் அரசின் மானியங்கள், செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

சென்ற பட்ஜெட்டில் தமிழ் நாட்டின் நிதி பற்றாக்குறை 44,481 கோடி ரூபாயாக இருந்தது.

மேலும் பார்க்க: மது பிரியர்களுக்கு அட்டகாச ஆஃபர்... ரூ.500க்கு குடித்தால் பைக், ப்ரிட்ஜ் பரிசு
First published: February 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading