முகப்பு /செய்தி /வணிகம் / “வீட்டுக்கு ஒரு தொழில் முனைவோர்...” பட்ஜெட் குறித்து சூப்பர் அப்டேட் சொன்ன நிதியமைச்சர்..!

“வீட்டுக்கு ஒரு தொழில் முனைவோர்...” பட்ஜெட் குறித்து சூப்பர் அப்டேட் சொன்ன நிதியமைச்சர்..!

பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன்

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் வரவிருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மதுரை சுந்தரராஜபுரத்தில் உள்ள மாநகராட்சி மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் ஆண்டாள் பொன்தாரகை சுய உதவிக்குழு தொடக்க விழா நடைபெற்றது.  இந்த விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தில் உள்ள தொழிற்பேட்டைகளில் 46 விழுக்காடு பெண்கள் பணியாற்றுகின்றனர் என்றார்.

மேலும்,  “இன்றைய சூழலில் வேலைவாய்ப்பை உருவாக்குவது தான் சிறப்பானதாக இருக்கும், அதற்கான பணிகள் நடந்து வருகிறது. தமிழக பட்ஜெட்டில் இதுகுறித்து மேலும் பல அறிவிப்புகள் வர உள்ளது. இதற்காக முதல்வர் தலைமையிலான திமுக அரசு திட்டமிட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

வீட்டிற்கு ஒரு தொழில் முனைவோர் உருவாக்கினால் தான், முதலமைச்சரின் ஒரு லட்சம் கோடி பொருளாதாரம் என்ற இலக்கை எட்டமுடியும்” என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று, பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், திட்டங்கள் குறித்து துறைவாரியாக ஆலோசனைக் கூட்டமும் நடந்து வந்தது. மார்ச் மாதம் நடைபெறவுள்ள  பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

First published:

Tags: Minister Palanivel Thiagarajan, Tamil Nadu, TN Budget 2023