Tamil Nadu Budget 2021 : ஏழை குடும்ப தலைவரின் இயற்கை மரணத்திற்கு ரூ. 2 லட்சம் காப்பீடு

Tamil Nadu Budget 2021 : ஏழை குடும்ப தலைவரின் இயற்கை மரணத்திற்கு ரூ. 2 லட்சம் காப்பீடு

ஓ.பன்னீர்செல்வம்

அரிய வகை நோய்கள் மற்றும் அசாதாரண நிகழ்வுகளுக்கு மொத்தம் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் காப்பீட்டு தொகை வழங்குவதற்கு ஒரு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.

  • Share this:
    தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 55.67 லட்சம் தகுதியான குடும்பங்களுக்கு, குடும்ப தலைவரின் இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் ரூபாயும், குடும்ப தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாயும், நிரந்தர இயலாமக்கு 2 லட்சம் ரூபாயும் காப்பீட்டு தொகையாக வழங்கப்படும் என நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

    தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் மேம்படுத்தப்பட்ட சலுகைகளுடன் நீட்டிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தற்போதைய ஒட்டுமொத்த காப்பீட்டு தொகையான 4 லட்சம் ரூபாய் 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும் எனவும், குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கான காப்பீட்டு தொகை 7.5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.

    மேலும், அரிய வகை நோய்கள் மற்றும் அசாதாரண நிகழ்வுகளுக்கு மொத்தம் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் காப்பீட்டு தொகை வழங்குவதற்கு ஒரு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.

    அத்துடன், புரட்சி தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டத்தை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் யுனைட்டெட் இந்தியா காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து மாநில அரசு துவக்கி வைத்துள்ளதாகவும், இந்த திட்டத்திற்கான முழு நிதியையும் மாநில அரசே ஏற்றுக்கொள்ளும் என  தெரிவித்தார்.

    இந்நிலையில், பள்ளிக்கரணை சதுப்பு காப்பதற்காக 165.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் செயல்படுத்துவதற்கு, பள்ளிக்கரணை சதுப்புநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

    Must Read - Tamil Nadu Budget 2021: பயிர்கடன் தள்ளுபடி திட்டத்திற்காக 5000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

     

    பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதிக்கு நீரைக் கொண்டு செல்லும் நீர்வழிகளை தூய்மைப்படுத்துவும் சதுப்பு நிலத்தின் நிர் உறிஞ்சும் தன்மையை மீட்டமைக்கும்,பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைதுறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஒருங்கிணைந்து செயல்படுத்தும் திட்டம் 816.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்றும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செலவம் தெரிவித்துள்ளார்.
    Published by:Suresh V
    First published: