• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Tamil Nadu Budget 2021: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல்

Tamil Nadu Budget 2021: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல்

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல்.

  • Share this:
    தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசி வருகிறார்.

    இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர், ஆளுநர் உரையுடன் கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் காலை 11 மணிக்கு, இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசி வருகிறார்.

    திமுக ஆட்சியில் தமிழகம் உபரி நிதி மாநிலமாக இருந்தாக தெரிவித்துள்ள அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தமிழக வரலாற்றிலேயே அதிக கடனை வாங்கி வட்டி கட்டிய அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு உள்ளதாக கடுமையாக சாடியிருந்தார்.

    கடன் தொகை அதிகரித்தபோதிலும், தேர்தலையொட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாணவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரையும் கவரும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட்டார்.

    சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார் துணை முதலமைச்சர். அதன் பின்னர், சபாநாயகர் தனபால் தலைமையிலான சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூடி, கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    நிதிநிலை அறிக்கை  தாக்கல் செய்யப்பட்டுவரும் நிலையில், முன்னதாக, எதிர் கட்சியினர் பேசுதற்கு அனுமதி கேட்டபோது, அவ்வாறு அனுமதி வழங்கப்படாது என சபாநாயகர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, எதிர்கட்சியினர் அமலியில் ஈடுபட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: