Tamil Nadu Budget 2021: பயிர்கடன் தள்ளுபடி திட்டத்திற்காக 5000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

Tamil Nadu Budget 2021: பயிர்கடன் தள்ளுபடி திட்டத்திற்காக 5000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

வேளாண்மை

விவசாய்துறைக்கு 11,982.71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    பயிர்கடன் தள்ளுபடி திட்டத்திற்காக, 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விவசாய்துறைக்கு 11,982.71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழக துணை முதலமைச்சரும், நிதயமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது இடைக்கால பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

    காவல்துறைக்கு 9,567.93 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறைகாக 22,218.58 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் நாள் அன்றைய நிலையில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் 4 லட்சத்து 85 ஆயிரத்து 50 2.54 கோடி ரூபாயாகவும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் நாள் அன்றைய நிலையில் 5 லட்சத்து 70 ஆயிரத்து 189 .29 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    2020-21ம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில், ஒட்டுமொத்தமாக மாநில அரசின் சொந்த வரி வருவாய், 1,09,968.97 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொகையானது 2020-21ம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் வருவாயாக எதிர்பார்க்கப்பட்ட 1,33,530.30 கோடி ரூபாவை விட 17.64 சதவீதம் குறைவானது என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published: